
தேவையானவை:
தோல் நீக்கிய பைனாப்பிள் - 3 துண்டுகள்
பழுத்த நாட்டுத் தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரசப் பொடி - 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 4 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
எண்ணெய் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
புளி - 1 நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - முக்கால் தேக்கரண்டி
தாளிக்க:
நெய் - அரை தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி - சிறிது
செய்முறை: தோல் நீக்கிய 2 பைனாப்பிள் துண்டுகளை மைய அரைத்துக் கொள்ளவும். 1 பைனாப்பிள் துண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை தனியாக வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்த பைனாப்பிள், தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் வறுத்துப் பொடித்ததை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், ரசப் பொடி சேர்த்து நுரை வரும் அளவு கொதிக்க விட வேண்டும். பிறகு பெருங்காயம், கொத்துமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பின்னர், நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்த்து பரிமாறவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.