தமிழிசை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான எம்.என். தண்டபாணி தேசிகர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகவும் இருந்தவர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளையின் சீடரான இந்த சங்கீத வித்வான் இயற்றிய பல சாகித்யங்கள் இப்போதும்கூட சங்கீத விற்பன்னர்களால் பாடப் படுகின்றன. "ரதிபதிப்ரியா' ராகத்தில் "ஜகஜனனி சுகவாணி கல்யாணி' என்கிற பாடலையும் "தாமரைப் பூத்த தடாகமடி' பாடலையும் யார் பாடினாலும் தண்டபாணி தேசிகர்தான் நினைவுக்கு வருவார். தண்டபாணி தேசிகர் நடித்த ஜெமினியின் நந்தனார் திரைப்படம் இன்றளவும் பேசப்படும் வெற்றிப் படம். அதில் இவரது பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெல்லாம் பாடப்படும் அளவுக்கு பிரபலமானவை. நந்தனார் மட்டுமல்லாமல் தண்டபாணி தேசிகர் பட்டினத்தார் (1936), வள்ளாள மகாராஜா (1937), தாயுமானவர் (1938), மாணிக்கவாசகர் (1939), திருமழிசை ஆழ்வார் (1945) ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், அந்த திரைப்படங்கள் இப்போது கிடைத்தற்கரியவை ஆகிவிட்டன. அந்த திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களின் இசைத்தட்டுக்கள் இருக்கின்றனவா, குறுந்தகடில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
படங்கள்: ஆர்.கே., ஏ.எஸ்.கணேஷ், யு.கே. ரவி, அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.