'அட்வைஸை மீறி நடிக்கிறேனே....'

ரஜினிகாந்த் யாரை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? குடும்பப் பெண்ணா, அல்லது பிரபல
'அட்வைஸை மீறி நடிக்கிறேனே....'
Updated on
1 min read

ரஜினிகாந்த் யாரை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? குடும்பப் பெண்ணா, அல்லது பிரபல சினிமா நடிகை யாரையாவதா? என்றெல்லாம் ரஜினியைக் கிண்டிப் பார்த்தும், எதற்கும் தக்க பதில் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை.

கே – ரஜினி சார். நீங்கள் கொஞ்சம் இளைத்திருப்பது போல் காணப்படுகிறீர்களே, கல்யாண ஏக்கம் எதுவுமில்லையே?

ரஜினி – நோ! நோ ஓவர் ஒர்க்தான். நான் எக்சர்சைஸ் எதுவும் செய்யவில்லை. மெடிடேஷன் தான் பண்ணுவேன். சில யோகாசனங்கள் எனக்குத் தெரியும். ஆனால் இப்போதெல்லாம் யோகாசனங்கள் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

கே –வெளிநாடுகளில் மலேஷியா, சிங்கப்பூர் போய் இருக்கிறீர்கள்…அமெரிக்காவுக்குப் போய் இருக்கிறீர்களா?

ரஜினி - இன்னும் இல்லை. விரைவில் போக இருக்கிறேன். இப்போது ‘காளி’ படத்தை தயாரிப்பவர், அமெரிக்காவில் என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நான் அமெரிக்கா போவேன் என்று நினைக்கிறேன்.

அந்தப் பக்கமாக ரஜினியின் டாக்டர் செரியன் வருகிறார். ரஜினியும் செரியனும் சில நிமிடங்கள் பேசுகிறார்கள். ‘தேவர் பிலிம்ஸ் படம் இன்று கிளைமாக்ஸ் காட்சி என்கிறார்கள். அதற்காகத்தான் நீண்ட நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். உங்களுடைய அட்வைஸை மீறி நடிக்கிறேனே என்று வருத்தப்படாதீர்கள். தேவர் பிலிம்ஸார் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். அதனால் உங்கள் நிபந்தனைகளை மீறி நடிக்கும்படி ஆயிற்று’ என்றார் ரஜினி. டாக்டர் செரியன் சிரித்துக் கொண்டே சொல்கிறார். ‘எதற்கும் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ ‘ஆகா’வென்று தலையை ஆட்டிவிட்டு ரஜினி கேமராவுக்கு முன் போய் நிற்கிறார்.

டாக்டருடைய பேச்சையும் மீறி அவர் அதிக நேரம் படப்பிடிப்பில் ஈடுபடுவதை கண்டுவிட்டு அங்கிருந்து அனைவரும் வியப்பும் திகைப்பும் அடைகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com