குடுமி வேடம் தானா எனக்கு?குமுறுகிறார் டெல்லி கணேஷ்

‘ரொம்ப பேருக்கு சந்தேகம். பெயருக்கு முன்னால் டெல்லியைத் தூக்கி வைச்சிருக்கானே இவனுக்கு தமிழ் தெரியுமான்னு!
குடுமி வேடம் தானா எனக்கு?குமுறுகிறார் டெல்லி கணேஷ்
Updated on
1 min read

‘ரொம்ப பேருக்கு சந்தேகம். பெயருக்கு முன்னால் டெல்லியைத் தூக்கி வைச்சிருக்கானே இவனுக்கு தமிழ் தெரியுமான்னு! நான் சுத்தமாத் திருநெல்வேலி தமிழ் பேசறவன். டெல்லி ஏர்ஃபோர்ஸ்ல சார்ஜெண்டா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். சோ அடிக்கடி டெல்லிக்கு வந்து நாடகம் போடுவார். அவரோட ‘மனம் ஒரு குரங்கு’ நாடகத்துல நடிச்சிருக்கேன். அப்புறம் நடிக்கணும்னு ஆசை நிறைய வந்தப்புறம் காத்தாடி ராமமூர்த்தி நாடகங்கள்ளே நடிச்சிக்கிட்டு இருந்தேன்!

ஒரு நாள் ‘பட்டினப் பிரவேசம்’ நாடகம் பார்க்க கே.பாலசந்தர் வந்தார். என்னோட நடிப்பைப் பார்த்துட்டு, நான் இருந்த நாடகத்தைப் படமாக எடுக்கப்போறேன். நீ நடிக்கிறாயா?ன்னு கேட்டார். ‘சார்! நான் கேமரா முன்னால் நின்னதே இல்லையே? சினிமாவுலே என்னால் நடிக்க முடியுமான்னு தெரியலையே’ன்னு சொன்னவுடன் ‘நான் உன்னை நடிக்க வெக்கறேன்னு’னு அந்தப் படத்தில் என்னை நடிக்க வச்சுட்டாரு!

முதல் படத்துல குடுமி வச்ச நபர் வேஷம். உடனே தமிழ் சினிமா உலகத்துல என்னை ஐயர் வேஷத்துக்குத் தான் லாயக்கு அப்படின்னு முடிவு செய்துட்டாங்க.

சினிமா உலகத்துல நான் நுழைஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் நான் புதுமுகமாகத்தான் இருக்கேன்! அதுவரைக்கும் நான் சந்தோஷப்படறேன்! எத்தனை படத்துல நான் குடுமி வச்சுக்கிட்டு நடிக்கறது? அதனால் இப்ப அது மாதிரி ரோல்ல நடிக்க என்னை யாராவது கூப்பிட்டாங்கன்னா வேண்டாம்னு சொல்லிடறேன்!

டயாபடீஸ்காரனுக்குத் தான் எல்லோரும் ஸ்வீட் கொடுப்பாங்க! பசியால ஒருத்தன் சாகறான்னா அவனுக்கு ஒரு வாய்த் தண்ணி கூடக் கொடுக்க மாட்டாங்க! தமிழ் சினிமா உலகமும் அப்படித்தான். இந்தத் தமிழ்ப் படவுலகை நம்பி டில்லியிலிருந்து மெட்ராஸுக்கு வந்திருக்கேன். எனக்கு வேறு விதமான காரெக்டர்கள் தந்து என்னை ஆதரிச்சா என்னா?

டெல்லி கணேஷ் கூற கேட்டவர்: செல்லமுத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com