ஸ்ரீதேவியும் அஸ்வினியும்

‘ஜானி’ படத்திலே தான் ஸ்ரீதேவி எனக்கு முதலில் அறிமுகமானார். எனக்குக் கிடைத்த இரண்டாவது அறிமுகம்
ஸ்ரீதேவியும் அஸ்வினியும்
Updated on
1 min read

‘ஜானி’ படத்திலே தான் ஸ்ரீதேவி எனக்கு முதலில் அறிமுகமானார். எனக்குக் கிடைத்த இரண்டாவது அறிமுகம் அவரோட அசாதாரணமான திறமை. இவ்வளவு திறமை அவரிடம் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. நான் மட்டும் இப்படி நினைக்கவில்லை. ‘சில சீன்களில் என்னாலே இவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை’ என்று ரஜினி வாய்விட்டுச் சொன்னார். அவ்வளவு அருமையான பர்ஃபாமன்ஸ்…சில எமோஷனல் சீன்களில் அவர் நடிப்பைப் பார்த்து டெக்னீஷியன்கள், வேடிக்கைப் பார்க்க வந்தவர்களும் கண் கலங்கியிருக்கிறார்கள். அவரோட நான் பேசினதிலேயே தெரிந்து கொண்டது – ரொம்பவும் கமர்ஷியலாக எடுக்கிற படங்களில் நடிப்பதை ஒரு வேதனையாக அவர் உணர்கிறார். கொஞ்சம் கூட கர்வம் கிடையாது.

***

உதிரிப்பூக்களுக்கு அஸ்வினி கிடைத்தது என்னுடைய பெரிய அதிர்ஷ்டம். படத்துக்குப் பெரிய அஸட். இவருக்கு இந்தப் படத்திலே கிடைத்த புகழ் இவருடைய அடுத்த படங்களுக்குப் பெரிய ரிஸ்காக இருக்கிறது. லவ் டூயட் பாடுகிற யூஷுவல் ஹீரோயினாக அஸ்வினியைப் பார்க்கிற நிலையில் ஜனங்கள் இல்லை. அந்த அளவுக்கு முதல் படத்திலேயே ஒரு பெரிய இமேஜ் உருவாகியிருக்கிறது. இன்னொரு படத்திலே இவரை நடிக்க வைக்கலாம் என்றால் என்ன காரெக்டர் கொடுக்கிறது என்பது எனக்குப் பெரிய பிரச்னை! சில சமயம் நல்ல ஆர்டிஸ்டுகளுக்கு இப்படி அமைந்துவிடும். அஸ்வினி ஒரு அன்யூஷுவல் ஃப்லிம் ஆர்டிஸ்ட். அவர் இல்லாமல் அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் ‘உதிரிப்பூக்கள்’ என்னவாகியிருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

- இயக்குநர் மகேந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com