ஹலோ! ஹலோ!

ஹலோ பஞ்சு அருணாசலமா? ஓட்டல் தாஜ் கோரமண்டலில் தங்கி இருக்கீங்களா? உங்களுக்கு பாம்குரோவ்
ஹலோ! ஹலோ!
Updated on
1 min read

ஹலோ பஞ்சு அருணாசலமா? ஓட்டல் தாஜ் கோரமண்டலில் தங்கி இருக்கீங்களா? உங்களுக்கு பாம்குரோவ் ஓட்டல் தானே ராசி? போகட்டும்; பஞ்ச தந்திரக் கதைகள் சிலவற்றை வெச்சுக் கார்ட்டூன் படம் எடுக்க ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கீங்களாமே? புது முயற்சிதான் பஞ்சு பிரதர்ஸாகிய நீங்கள் லட்சுமணன், சுப்பு யார் தான் சோடை போயிருக்கீங்க?

முன்பு ஜெமினி வாசன் தாணுவைக் கொண்டு சில கார்ட்டூன் படங்க எடுக்கத் திட்டம் போட்டாரு. சரியா ‘தாணு’ கோவாபரேட் செய்யல்லேன்னு கேள்விப்பட்டேன். ஆனா கார்டூனிஸ்ட் ராகி அப்படியில்லே. புதுமையா ஏதாச்சும் செஞ்சு தனக்கும் உங்களுக்குத் தனி பெயர் கிடைக்கணும்னு பாடுபடக்கூடியவர்

நீங்க செல்கட் செஞ்சிருக்கிற சப்ஜெக்ட் தான் பஞ்சதந்திரமாச்சே! தந்திரத்துக்குப் பஞ்சமில்லாமே பார்த்துக்குங்க!

-அம்பி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com