

அண்மையில் நடைப்பெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேறு எந்த வேட்பாளருக்கும் கிடைக்காத அளவு அதாவது 27 ஆயிரம் வோட்டுக்கள் மிகுதியாகப் பெற்று வெற்றி அடைந்திருக்கிறார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எத்தகைய ஈடுபாடுடன் எஸ்.எஸ்.ஆரை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது கலை உலகம் அதற்காகப் பெருமிதம் கொள்ளவே செய்யும்.
எஸ்.எஸ்.ஆருக்குச் சட்டமன்றம் புதிது அல்ல. முன்பு தேனித் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றவர்தான். ஆனால் இந்தத் தடவை அவர் பெற்றிருக்கும் வெற்றி வேறு எவருக்கும் கிடைக்காத அளவுக்கு அதிக வாக்குகள் – அதாவது 27 ஆயிரம். இ.காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் பெற்றுப் பெரும் சாதனை புரிந்தது ஆகும்.
அதற்காக லட்சிய கலைஞரைப் பாராட்டுகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.