கட்... கட்...

கிசுகிசுவானது 25 சதவிகிதம் உண்மையாகவும் 75 சதவிகிதம் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்காமலும்
கட்... கட்...
Updated on
1 min read

கிசுகிசுவானது 25 சதவிகிதம் உண்மையாகவும் 75 சதவிகிதம் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்காமலும் இருக்க வேண்டும் – சிவகுமார்

இந்த சதவிகிதம் மாறும் போதுதான் தகராறே ஆரம்பமாகிறது!

***

ஓ மஞ்சு படத்தில் தீபா நடித்து வந்தார். குறுகிய காலத்தில் தீபா பருத்து விட்டதால் அவரைப் படத்திலிருந்து நீக்கி விட்டார் ஸ்ரீதர்.

நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லையே…படப் பெயரை ஓ பஞ்சு என்றூ மாற்றியிருக்கலாமே?

***

47 நாட்கள் என்ற படத்தில் நான் ஆக்சுவலாக நடிக்கவில்லை. கேஷுவலாக ஒரே ஒரு சீன்ல வருகிறேன். அவ்வளவுதான்! – சிவசங்கரி

ஒரு நாள் ஒரு காட்சி நடிகை அவ்வளவுதான்!

***

முரட்டுக்காளை படத்தில் ரஜிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறார் ஜெய்சங்கர்.

உண்மையில் படவுலகில் இப்போது பல கதாநாயக்ரளுக்கு ரஜினிகாந்த்தான் வில்லனாக இருக்கிறார்.

***

படப்பிடிப்பு நேரத்தில் ஆற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய புதுமுகம் நவஸ்ரீயை தயாரிப்பாளர் ஆற்றில் குதித்துத் காப்பாற்றினார்.

கைகொடுத்த தெய்வம் என்று பத்திரிகைக்கு அந்த நடிகை பேட்டி கொடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com