

ரஜினிகாந்த்
எந்தப் படம் பண்ணினாலும் எங்கள் இரண்டு பேரில் யார் நன்றாக நடிக்க வேண்டும் என்று போட்டிப் போட்டுக் கொண்டு நடிப்போம். மூன்று முடிச்சிலிருந்து இது வழக்கம். ‘ப்ரியா’ படத்தில் எனக்குச் சரியான காரெட்கர் இல்லை. அதனால் போட்டிப் போட மாட்டேன் என்று முதலிலேயே சொல்லி விட்டேன்.
மகேந்திரன்
இவர் டைரக்ட் செய்யும் போது செட் ரொம்ப சைலண்டாக இருக்கும். ஷூட்டிங் முடிந்து விட்டால் ஐயோ, முடித்துவிட்டாரே என்று இருக்கும். ரொம்ப இண்டரஸ்டிங் பர்சனாலிட்டி.
சரோஜாதேவி
தமிழ் – தெலுங்கு. நான் நடித்த எத்ந் மொழிப் படம் ரிலீசானாலும் உடனே பார்த்துவிட்டு அதில் என் நடிப்பைப்பற்றி நிறை-குறை இரண்டையும் எடுத்துச் சொல்லி எனக்கு ஃபோன் செய்வார்.
ஜெய்சங்கர்
நமக்கு ஷூட்டிங் மூட் இல்லை என்றாலும் நம்மைச் சிரிக்க வைத்து, மூடை வரவழைத்து நடிக்க வைத்து விடுவார். அவ்வளவு கலகலப்பான நடிகர்.
மனோரமா
அவர் எனக்கு இரண்டாவது அம்மா என்று சொல்லலாம். என் மேலே அவ்வளவு பாசம். அவர் வைத்திருக்கிற பொருள்களில் எதையும் தப்பித் தவறி நல்லாயிருக்கிறது என்று சொல்லிவிடக் கூடாது. உடனே அதை நமக்குக் கொடுத்துவிடுவார். வேண்டாம் என்றால் விடமாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.