அந்த இருவர் – சரிதா சொல்கிறார்!

தமிழில் என் முதல் ‘நாயகர்’. மிதமாக நடிக்க வேண்டுமா, ஓவராக நடிக்க வேண்டுமா, வித்யாசமான ஸ்டைலா,
அந்த இருவர் – சரிதா சொல்கிறார்!
Updated on
1 min read

ரஜினிகாந்த்

தமிழில் என் முதல் ‘நாயகர்’. மிதமாக நடிக்க வேண்டுமா, ஓவராக நடிக்க வேண்டுமா, வித்யாசமான ஸ்டைலா, எதுவாயிருந்தாலும் அதையும் அக்கறையோடு செய்யும் ஒரு நல்ல நடிகர். ஒரு செட் கல கலப்பாக இருக்கிறதென்றால் அங்கு ரஜினி இருக்கிறார் என்று அர்த்தம். எட்டாத உயரத்திற்குப் போனாலும், மனத்தளவில் மாறாத பழைய ரஜினிதான் இவர்.

கே.பாலசந்தர்

தமிழிலும் தெலுங்கிலும் இவரால் நான் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது என் நல்ல நேரம். என்னைப் பொறுத்தவரை இவருடைய படங்களில் நட்சத்திரங்கள் செய்வது, இவர் செய்து காட்டுவதில் நூறில் முப்பது சதவிகிதம் கூட இருக்க முடியாது. காட்சி சரியாக வரும்வரை விடாமல் வேலை வாங்குகிற பிடிவாதக்காரர். என் மானசீகக் குரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com