

கண்ணதாசன் திருச்சி செல்வதற்காக ஒரு சமயம் சென்னை மீனப்பாக்கம் நிலையத்தில் காத்திருந்தார். விமானம் புறப்பட 15 நிமிடம் முன்னதாக அங்கு வந்த இயக்குனர் ஸ்ரீதர் அவசரமாக, ‘நாளை நெஞ்சில் ஓர் ஆலயம்’ படப்பிடிப்பு ஆரம்பம். உங்க பாடலைத்தான் ரிகார்டிங் பண்ணனும் எழுதித் தாருங்கள்’ என்றதும், கவிஞர் மூன்றே நிமிடத்தில்,
‘முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ’
என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.
-ஸ்ரீதர் வானொலி பேட்டியில் கூறியதைக் கேட்டவர் கே.எஸ்.சுப்ரமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.