ஒரு நடிகையின் கடிதம்!

சினிமா எக்ஸ்பிரஸ் எடிட்டர் திரு.நவீனன் அவர்களுக்கு,யூ.ஆர்.ஜீவரத்தினம் எழுதிக் கொள்வது.
ஒரு நடிகையின் கடிதம்!
Updated on
1 min read

சினிமா எக்ஸ்பிரஸ் எடிட்டர் திரு.நவீனன் அவர்களுக்கு,

யூ.ஆர்.ஜீவரத்தினம் எழுதிக் கொள்வது. வணக்கம்.

1.9.1980-ம் தேதி சினிமா எக்ஸ்பிரஸில் என்னுடைய பேட்டியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. நான் எனது சொந்த ஊரான ஊஞ்சலூரில் தான் இந்த எனது பேட்டிக் கட்டுரையைப் படித்தேன். அதனால் தான் உடனடியாகத் தங்களுக்கு தபால் எழுத முடியவில்லை. சென்னை வந்து ஒரு வாரம் தான் ஆகிறது.

எங்களைப் போல் உள்ள பழைய நடிகர், நடிகைகளை இந்தக் காலத்திலும் அறிமுகப்படுத்தியதிற்கு என் சார்பாகவும் பழைய நடிகர், நடிகைகள் சார்பாகவும், எங்களது நன்றியைத் தங்களுக்கும் இங்கு வந்து என்னை பேட்டி கண்ட அன்பர் மருததிற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இசைக்குயில்’, ‘தமிழிசை வாணி’, ‘முத்தமிழ் ரத்தினம்’, ‘கலைமாமணி’ யூ.ஆர்.ஜீவரத்தினம்.

12, மூன்றாவது தெரு

கோபாலபுரம்

சென்னை – 600 086

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com