விஜயா பாராட்டிய விஜய சந்திரிகா

நூறு நாடகங்கள் ஐநூறு முறை நாடகத்திற்காக மேடையேற்றம், அறுபது திரைப்பட்டங்கள், கணக்கற்ற ரேடியோ
விஜயா பாராட்டிய விஜய சந்திரிகா
Updated on
1 min read

நூறு நாடகங்கள் ஐநூறு முறை நாடகத்திற்காக மேடையேற்றம், அறுபது திரைப்பட்டங்கள், கணக்கற்ற ரேடியோ நாடகங்கள், டெலிவிஷன் நாடகங்கள், அரசு செய்திப் படங்கள், இந்த ஸ்கோர் விஜயசந்திரிகாவினுடையது.

இவர், நடித்த ‘கஸ்தூரி விஜயம்’ ஆராதனை, பாய்மரம் போன்ற நாடகங்கள் நூறு முறை மேடையேறி இருக்கின்றன.

கஸ்தூரி விஜயம் படமாக்கப்பட்டு வெளியான பிறகு, அதில் கதாநாயகியாக நடித்த கே.ஆர்.விஜயா ‘நாடகத்தில் நடித்த விஜயசந்திரிகாவைப் போல நான் நடித்திருந்தேன் என்றால் இந்தப் படம் நூறு நாட்கள் தாராளமாக ஓடியிருக்கும்’ என்று சொன்னாராம்!

ஐந்து வயது முதல் பரதநாட்டியம் ஆடிவரும் இவர் கலைமாமணி, மற்றும் மயிலாப்பூர் அகாடமியின் இரண்டு விருதுகள், தவிர ரசிகர் மன்றங்கள் அளித்த பட்டங்கள், கேடயங்கள் பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் வரவேற்பு அறையில் அலங்காரமாக வைத்து அவற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார். ‘வெறும் கிளாமருக்கு மதிப்பு கொடுக்கும் இன்றைய தமிழ்ப் திரையுலகம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்’ என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

தேவராஜ் – மோகன், ஏ.ஸி.திருலோக சந்தர், பீம்சிங், பாரதிராஜா, மகேந்திரன், தாசரி நாராயண ராவ் – இவர் நடித்த படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர்கள். அவர்கள் யார் கண்ணிலும் இவருக்கு ஒரு கதாநாயகிக்கு இருக்க வேண்டிய திறமை, அழகு எல்லாம் இருந்தும், படாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்!

- பிரபுசங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com