

நடிகர் முத்துராமன் 'அலைகள் ஓய்வதில்லை' தமிழ் தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் தன் பிள்ளை முரளி கார்த்திகேயனை, ஏ.வி .எம் சரவணன் தலைமையில் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
முரளி கார்த்திகேயன் தமிழ்ப் படவுலகுக்கு 'கார்த்திக்' என்ற பெயரிலும், தெலுங்கு படவுலகுக்கு 'முரளி' என்ற பெயரிலும் அறிமுகமாகிறார்.
பி.ஏ கார்ப்பரேட் பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும் தன் பிள்ளை முரளி கார்த்திகேயனை, படிப்பும் நடிப்பும் என்ற வகையில் டிகிரி வாங்கும் வரையில் படிப்பைத் தொடர வேண்டும் என அவரைக் கேட்டுக் கொள்கிறேன்' என எல்லார் முன்னிலையிலும் முத்துராமன் கேட்டுக் கொண்ட பண்பு அனைவருடைய உள்ளங்களையும் தொட்டது.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.