என்னுடைய தெலுங்கைத் திருத்துங்கள் - ரஜினி கேட்டது யாரிடம்?

'செலக்கமா செப்பந்தி' (நிழல் நிஜமாகிறது) என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலில் அவர் என்னோடு கதாநாயகனாக நடித்தார்.
என்னுடைய தெலுங்கைத் திருத்துங்கள் - ரஜினி கேட்டது யாரிடம்?
Updated on
1 min read

'செலக்கமா செப்பந்தி'  (நிழல் நிஜமாகிறது) என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலில் அவர் என்னோடு கதாநாயகனாக நடித்தார். அப்போது அவருக்கு சரியாக தெலுங்கு பேச வராததால் அவர் பேசும் தெலுங்கு மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். இதை உணர்நத அவர் ஒரு நாள் என்னிடம், "நான் ஏதாவது தப்புத் தவறாகப் பேசினால், அதை நீங்கள் சொல்லித் திருத்தினால் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

அபபோது அவரிடம் நான் "இப்போது உங்களுக்கு இப்படிச் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும் உங்களிடம் நல்ல நடிப்புத் திறமையிருக்குன்னு நினைக்கிறேன் . பேச்சில் உள்ள குறைகள் போகப் போக சரியாகி விடும். அப்போது எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்கள் " என்று சொன்னேன். இப்போது முதல் தர நட்சத்திர வரிசையில் இருக்கிறார்.

(ரஜினிகாந்த் பற்றி நடிகை சங்கீதா)

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com