காமெடி நடிகர் மட்டும் அல்ல நல்ல பேச்சாளரும் கூட ! யாரைச் சொல்கிறார் மனோரமா?

காமெடியில் ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டவர் கவுண்டமணி.
காமெடி நடிகர் மட்டும் அல்ல நல்ல பேச்சாளரும் கூட ! யாரைச் சொல்கிறார் மனோரமா?
Updated on
1 min read

காமெடியில் ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டவர் கவுண்டமணி. சாதாரணமாக வேகமாகத்தான் எல்லா நடிகர்களும் பேசுவார்கள். ஆனால் கவுண்டமணி காமெடி செய்யும் பொழுது ரொம்பவும் நீட்டி முழக்கி பேசுவார். காமெடி. குணச்சித்திரம் இரண்டும் செய்வதில் கெட்டிக்காரர்.  செட்டுக்கு வரும் போது எப்போதும் எளிமையாகவும், அடக்கமாகவும், வெள்ளை பாண்ட் சட்டை அணிந்து வருவார். அதிகம் பேசமாட்டார். இவரைப்  பார்த்தால் முரட்டுத்தனமான தோற்றம் இருக்கும். ஆனால் தங்கமான மனிதர் இவர். பழகுவதற்கு   இனிமையானவர். சிலர் நடிக்கும் போது  மற்றவர்களின் நடிப்பைக் கூர்ந்து கவனிப்பார். அவர்கள் நடிப்புக்கு ஒரு படி மேலேதான் நடிப்பார்.நானும் இவரும் எப்[பொழுதும் போட்டி போட்டுக் கொண்டுதான் நடிப்போம்.  நான் எப்பவும் இவரை 'மணி கவுண்டர்' என்றுதான் அழைப்பேன். சாதாரணமாக செட்டுக்கு வந்து விட்டால், அன்றைக்கு எடுக்கப் பட வேண்டிய தன காட்சிகள் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருப்பார். வேறு அரட்டை எதுவும் அடிக்க மாட்டார். 

சிறந்த காமெடி நடிகரான இவரை வில்லன் பாத்திரத்திலே அதிகம் போடுவதால் இவரது நகைச்சுவை நடிப்பு தெரியாமலேயே போய்  விடுகிறது. அவர் காமெடி பாத்திரங்களில் மேலும் திறமை வாய்ந்தவர். அதோடு மட்டுமல்ல நல்ல பேச்சாளரும் கூட எனபதை அவரோட போன பல நிகழ்ச்சிகளில் இருந்து தெரிந்து கொண்டேன். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

பேட்டி: சிக்கி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com