இதோ பதில்

மைசூரில் ஒரு அவுட்டோர். இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தார்கள். அப்போது ஒரு நடிகருக்கு கொடுக்கப்பட்டிருந்த
இதோ பதில்
Updated on
1 min read

இரண்டு நடிகர்களுக்குள் சண்டை நடந்து, அதைப் பார்த்திருக்கிறீர்களா? தனபால், ஸ்ரீரங்கம்

மைசூரில் ஒரு அவுட்டோர். இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தார்கள். அப்போது ஒரு நடிகருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையை திடீரென்று அவரைவிடப் பெரிய நகைச்சுவை நடிகருக்குக் கொடுத்துவிட்டார்கள். வந்தது சண்டை. இரண்டு காமெடி நடிகர்களும் மோதிக் கொண்டார்கள்! நல்ல காமெடி! ஏன்…சார் உங்களுக்கு வேறு கேள்வியே கிடைக்கவில்லையா?

வாணி ஜெயராம் பாடியவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது? வி.பொன்னழகன், கோவை

ஏழு ஸ்வரங்களுக்குள்….

சுகாசினியின் நடிப்புக்கு கமல் தடை விதிப்பது உண்மையா? கே.சி.சம்பத், ஈரோடு

இல்லை!

‘இளையராஜா ரசிகை’ எப்போது வெளிவரும்? டி.பாலசுப்ரமணி, வெள்ளியானை

அது இளையராஜாவின் கையிலா இருக்கிறது?

குழந்தை, அரசியல்வாதி இருவருக்கும் என்ன ஒற்றுமை? த.சத்தியநாராயணன், அயன்புரம்

தீராத விளையாட்டுப்பிள்ளை!

திருமணம் ஆனதால் ரஜினியின் மார்க்கெட் பாதிக்கப்படுமா? அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

திருமணம் அவரை பாதிக்காது!

ஒரு நட்சத்திரம் கலைக்காகப் பாடுபட வேண்டுமா, தனக்காக பாடுபட வேண்டுமா? எஸ்.பாலாசுந்தரராஜன், சிவகாசி

கலை உலகில் தனக்காகப் பாடுபட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com