லட்சுமி - ஒரு வித்யாசமான பார்வை

‘மானஸரோவரில்’ லட்சுமியின் அழகான வரவேற்பரையில், சற்று அசெளகரியமான சோபாவில், நான். லட்சுமியின்
லட்சுமி - ஒரு வித்யாசமான பார்வை
Updated on
2 min read

Egoist. A cynic woman

லட்சுமியைப் பற்றிய சில விமர்சனங்களின் கணிப்பு இது.

‘மானஸரோவரில்’ லட்சுமியின் அழகான வரவேற்பரையில், சற்று அசெளகரியமான சோபாவில், நான். லட்சுமியின் நிழலுக்குப் பெருமை சேர்த்த பதக்கங்கள், பட்டங்கள் வியூகமாய் அணிவகுத்து நிற்க, எதிரே நிஜமான லட்சுமி கர்வமாய், கம்பீரமாய்…வழக்கமில்லாத வழக்கமாய் பெய்த மழை; அந்த மாலையின் மங்கிய நேரத்தில் என் மீது முதல் அஸ்திரம் வீசப்பட்டது.

‘பேஸிகலி வம்பை மாத்திரம் பிரசுரிக்கும் பத்திரிகைகளால் எந்தப் பயனும் கிடையாது. ஒருவருடைய அடிப்படை அறிவு வளர்ச்சிக்கு அவை பயன்படுவதேயில்லை. இப்போது இது ஒரு நல்ல பிஸினஸ் ஆகிவிட்டது. ஒரு சிலவற்றைத் தவிர மற்றவற்றால் என்ன பிரயோஜனம்? ஐ டோண்ட் ரீட் தீஸ் கைண்ட் ஆஃப் மாகசின்ஸ். இன்ஃபெர்மேடிவ் ஆகச் சில விஷயங்கள் சொல்கிற சில பத்திரிகைகள் தவிர வேறெதுவும் நான் படிப்பதில்லை. சிலவற்றில் தொடர் கதைகள் படிப்பதுண்டு ஏனெனில் கதைகள் மூலமாக நாம் எவ்வளவோ தெரிந்து கொள்ள முடிகிறது.

சாதரணமாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்காத நீங்கள், நான் சந்திக்க வேண்டும் என்றதும் சட்டென்று சரி சொன்னது எவ்விதம்?

நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகையின் பின்னணி, பத்திரிகையாளர்களை நான் சந்திப்பதில்லை என்ற குறைக்கு இன்று பதிலளிக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டு, எனக்கு அன்றும் இன்றும் என்றும் ஆதரவு தரும் பத்திரிகை நண்பர்கள் நான் எப்போதும் உதாசீனப்படுத்தியதில்லை. அவர்கள் என்னை நல்ல விதமாய் நடத்தினால் நானும் நல்லவளாகவே இருக்கிறேன். உலகில் பலர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சில பத்திரிகை நண்பர்களும் இருக்கிறார்கள்.

பத்திரிகைகளில் வெளியாகிற கதைகள் மட்டும், உங்கள் அறிவுக்கு தீனி போடுவதாக நினைக்கிறீர்களா?

நோ. அது சினிமாவுக்கு ஏதாவது புது ‘த்ரெட்’ கிடைக்குமா என்று தேடுகிற புத்தி; சுயநலம். மேலும் இன்றைய எழுத்தாளர்களின் புது எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’.

‘பொல்லாதவன்’ படத்தில் புதுசாய் என்ன செய்திருக்கிறீர்கள்? சூஸியாக இருப்பதாகச் சொல்வது இந்த ரோலுக்கு எப்படிப் பொருந்தும்?

உண்மையை வெளிப்படுத்தத் துடிக்கிற ஒரு ஆவேசமான பெண். பயந்து நடுங்குகிற ஒரு சாதாரண வெகுளி. இரண்டும் கலந்த ஒரு மிக்ஸட் ரோல் அது. இட் ஈஸ் எ குட் காரக்டர்.

நீங்கள் ஏற்று நடிக்கிற ஒவ்வொரு பாத்திரமும் உங்கள் அடிமனசில் உறைய நிஜமான லட்சுமியின் குணாதிசியங்கள் பற்றி குழப்பமே வராதா உங்களுக்கு?

நோ. ஐ ஆம் க்ளியர். அறிவுக்கும் மனசுக்கும் இணைப்பு இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு. என் மனசு ஏற்றுக் கொள்கிற காரியத்தை அறிவின் உதவியுடன் செய்கிறேன். அறிவின் எச்சரிக்கை ஒலி எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை நான் புறக்கணிப்பதில்லை. நடித்து முடித்து வெளியே வந்தவுடன் மனதின் ஆதிக்கம் மேலோங்கி விடுகிறது.  நடித்த காரெக்டர் மறந்து போகிறது. செட்டை விட்டு வெளியே வந்து விட்டால் நான் லட்சுமி. திரையில் வேறுபட்ட பாத்திரங்களில் நடிக்கிறேனே தவிர அவை என் மனசை எந்த ரீதியிலும் பாதிக்க விடுவதில்லை. எந்த நிமிஷத்தில் பாத்திரமாக மாறவேண்டும் ‘கட்’ சொன்னதும் விழித்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு எனக்கு உண்டு. ஸோ நோ பிராப்ளம்.

‘கங்கா’வைவிட, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படப் பாத்திரம் உயர்ந்தது. சிறந்தது என்று நான் கருதுகிறேன். பட். அதன் ரிசல்ட் உங்களுக்குத் தெரியும். ஒரு படத்தின் வெற்றி, தோல்விகள் மட்டும் ஒரு நடிகையின் தரத்தை, கம்பீரத்தை நிர்ணயித்துவிட முடியாது.

‘நம் சமூகத்தில் சிந்தித்தால், அதன் விளைவில் காரியங்கள் செய்தால், அவளை ஒதுக்கித் தனிமைப்படுத்திப் பேசுகிறார்கள்.

எனக்கு இருக்கிற சில நல்ல நண்பர்கள் தவிர யாரையும் நான் நெருங்கவிடுவதில்லை. நன்றாகப் பழகி என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இடம் கொடுத்துவிட்டு பின் முதுகில் குத்துப்பட நான் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? அதற்குப் பதில் ஒதுங்கியிருப்பது மேல் இல்லையா?

இந்தச் சந்திப்பை இக்னோர் பண்ணிவிட்டு, பப்ளிஷ் செய்யாமல் இருந்தால் அடுத்த முறை சந்திக்கும் போது எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? என்று முன்பு ஒருவரிடம் கேட்ட மாதிரி இவரிடமும் கேட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com