

எனது அருமை நண்பர், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதையாக வாழ்ந்து, காவியமாக மாறி விட்டவர். காலத்தால் அழியாத காவியத் தலைவனான அவரது கலை உலகச் சாதனைகளும், இலக்கியச் சாதனைகளும், பக்தி நயமும் இமயமாகக் குவிந்து கண் முன் நிற்கின்றன.
பாரதக் கலை உலகில் கம்பன், காளிதாசன், பாரதி என்ற சாதனையாளர்களின் வரிசையில் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர் கவிஞர் கண்ணதாசன், நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களையும் கவிதைகளையும் இயற்றிய கவிஞர் கண்ணதாசன். நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களையும், கவிதைகளையும் இயற்றிய பெருங்கவிஞர் அவர்.
கலை உலகில் கண்ணதாசன் ஒரு சாதனைச் சிகரம். அவர் அற்புதமான பாடலாசிரியர் மட்டுமல்ல, கதை-வசனங்களிலும் கவி நயத்துடன் இலக்கியச் சுவையையும் வாரி வழங்கியவர்.
நாட்டில் எத்தனையோ கவிஞர்கள் தோன்றலாம்-புகழ்பெறலாம். ஆனால் கவிஞர் கண்ணதாசன் வகித்த இடத்தை யாரும் பெற முடியாது.
நண்பனே! நீ எங்கு சென்றாயோ?
‘நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே!
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே…’
தமிழே! தமிழின் சுவையே! இனிமையே! இணையற்ற கவிஞனே! உன் வரலாறு காவியமாகும்! உன் கவிதைகள் அழியாத கல்வெட்டுக்களாகும்! நீ பாடியதெல்லாம் தத்துவங்களாகும்!
தமிழே! தமிழ் அமுதே1 கவியரசே! காவியத் தலைவா! நின் புகழ் வாழ்க! நின் புகழ் வாழ்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.