நந்தவன ராஜ்பரத்!

டைரக்டர் ராஜ்பரத் வீட்டில் பூச் செம்புகளில் மட்டுமல்ல, ரேடியோ டி.வி. போன்ற கண்ட இடங்களில் கூட
நந்தவன ராஜ்பரத்!
Updated on
1 min read

டைரக்டர் ராஜ்பரத் வீட்டில் பூச்செம்புகளில் மட்டுமல்ல, ரேடியோ டி.வி. போன்ற கண்ட இடங்களில் கூட அன்றலர்ந்ததிலிருந்து, என்றோ மலர்ந்த மலர்கள் வரை கொத்துக் கொத்தாக இருப்பதைக் காணலாம். இதன் பின்னணி இனிமையானது.

சில நாட்களுக்கு முன்னால் ராஜ்பரத்துக்கு போன் வந்தது. ஒரு பெண்ணின் குயில் குரல் ஒலித்தது. ‘நான் உங்கள் ரசிகை. நான் அனுப்பி வைக்கும் பிரசண்டேஷனைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அதற்கு மேல் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல் ஃபோனை வைத்துவிட்டது!

அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு வேன் ராஜ்பரத்தின் வீட்டு வாசலில் வந்து நிற்கும். கண்ணாடிக் காகிதத்தில் அடைக்கப்பட்ட மலர்க்கொத்தை டிரைவர் கொண்டுவந்து ராஜ்பரத்திடம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.

இதுபற்றி ராஜ்பரத் சொல்லுகையில், ‘அந்த முகம் தெரியாத பெண் ஸ்பென்சரில் என் அட்ரசைக் கொடுத்துவிட்டு பணமும் கட்டிவிட்டாள். அதிலிருந்து தினமும் மலர் சப்ளையாகிக் கொண்டிருக்கிறது. மலர்க் கொத்துகளை வைப்பதற்கு இடமில்லாமல் எல்லா இடங்களிலும் இப்படிச் செருகி வைத்திருக்கிறேன். என் வீடே இதனால் ஒரு நந்தவன் போலாகிவிட்டது. சில மலர்கள் வாடியும் போய்விட்டன. ஆனால் அதை எடுத்து எறிய எனக்கு மனமில்லை.’ என்று வாடிப் போயிருந்த ஒரு மலர்க்கொத்தைப் பார்த்தவாறே வாட்டமுடன் கூறினார்.

ராஜ்பரத் சொல்வதைப்பார்த்தால் அவருக்குக்காகவே தினத்துக்கும் ஒரு மலர்க்கொத்து அவதாரம் எடுத்து வந்து, அவருக்கு முன்னால் வாட்டமுடன் நிற்பதுபோல் தோன்றுகிறது.

அது ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com