

புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் தமிழ்ப்பட வரலாற்றில் பெரிய ரெகார்டை ஏற்படுத்திய நீங்கள் இப்போது பிரபல நடிக நடிகைகளைப் போடுவானேன்?
கேரக்டர்களுக்குத்தான் ஆர்டிஸ்டுகளைத் தேர்ந்தெடுத்துக்கிறேன். புதுமுகங்களை அறிமுகப்படுத்திய போது பழைய முகங்களிடம் போகவே மாட்டேன் என்று நான் எப்போது சொன்னேன்? நான் டைரக்ட் செய்த முதல் படமான ‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மூவரையும் நடிக்க வைத்தோம்! அடுத்து புது முகங்களை அறிமுகப்படுத்தினோம். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமலஹாசனையே நடிக்க வைத்தோம். இப்போது ‘டிக்…டிக்….டிக்’ படத்தில் கமலஹாசனைப் போட்டிருக்கிறோம்.
‘நிழல்கள்’ படத்தில் புதுமுகங்கள் நடித்தார்கள். அண்டஹ்ப் படம் எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெறாததால் பழைய நடிகர்களை நாடிப் போகிறேன் என்று நினைப்பது தவறு. அப்படிப் பார்த்தால் ‘நிழல்கள்’களுக்குப் பிறகு உருவாக்கிய படம் ‘அலைகள் ஓய்வதில்லை’ அந்தப் படத்தில் நான் பிரபலமானவர்களை அல்லவா போட்டிருக்க வேண்டும்? புதுமுகங்கள் கார்த்திக்கையும் ராதாவையும் தானே போட்டிருக்கிறேன்’ என்றார் பாரதிராஜா.
கேரக்டருக்குத்தான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். சிவாஜிக்கு ஏற்ற கேரக்டர் வந்தால்…?
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சிவாஜிக்கு ஏற்ற கதை, கேரக்டர் வரும்போது அவர் தான் நடிக்க வேண்டுமென்று அவரைச் சந்தித்துக் கேட்பேன்.
தமிழ் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘ஸ்டார் சிஸ்டத்தை’ உடைத்து எறிந்தது நீங்கள் தானே?
ஸ்டார் சிஸ்டத்தை நான் உடைத்தேன் என்று சொல்லப்படுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அது என் வேலையல்ல. என் படங்களுக்குப் பொருத்தமான நடிகர்களை, நடிகைகளை நான் தேர்ந்தெடுப்பதால் ‘ஸ்டார்’ சிஸ்டத்தை ஒழித்ததாகிவிடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.