ரஜினிகாந்த் பதில்கள்

சினிமாவில் நடிப்பது, மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவது, பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவது
ரஜினிகாந்த் பதில்கள்
Updated on
2 min read

வாசகர் கேள்விகளுக்கு பதில் தருகிறார் ரஜினிகாந்த்

ஆர்.கண்ணன், மதுரை

சினிமாவில் நடிப்பது, மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவது, பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவது இந்த மூன்றில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால்….?

மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவதையே தேர்ந்தெடுப்பேன்.

**

எம்.அந்தோணி, கடலூர் – 1

ஏன் ரஜினி சார்! கமலுக்கும் உங்களுக்கும் கடும் மோதலாமே?

நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் உரிமையோடு பேசிப்பழகும் போது சில விஷயங்கள் மோதலைப் போலத் தோற்றம் தரலாம்! நத்திங் சீரியஸ்! வி ஆர் ஃப்ரண்ட்ஸ்!

**

சிவ.ராமநாதன், வேகுப்பட்டி (புதுக்கோட்டை)

உழைப்புக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? அல்லது ஊதியத்துக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா?

உழைத்தால் தானே ஊதியம் கிடைக்கும்! அப்படி உழைக்கும் போதும் கடுமையாக உழைத்தால் தான் நல்ல பெயரைத் தேடிக் கொள்ள முடியும். ஆக, முதலிடம் உழைப்புக்கு, உழைத்த பிறகு தன்னால் வருவது ஊதியம்!

**

ப.மூர்த்தி, பெங்களூர்-21

தங்களின் பலம் எது, பலவீனம் எது?

பலம் – பிடிவாதம். பலவீனம் – முன் கோபம்!

நான் உங்கள் ரசிகன், கல்லூரி மாணவன், எனக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

நன்றாகப் படியுங்கள்! கல்வி நம் நாட்டுக்கு மிக மிக முக்கியம். படிப்புக்குப் பிறகு வீட்டுப் பிரச்னைகளிலேயே மூழ்கிவிடாமல் நாட்டுப் பிரச்னைகளைப் பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள்!

**

எல்.விஜயன், ராஜபாளையம்

நீங்கள் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கும் போது மிகவும் வெளிப்படையாக உங்களது அந்தரங்க விஷயங்களையும் பளிச்சென்று சொல்லுகிறீர்களே? இது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறீர்களா?

நான் படங்களில் தான் நடிக்கிறேன். நேரில் நடிக்கத் தெரியாது. அதுவும் தவிர சில உண்மைகளை யாருக்கும் பயப்படாமல் கூறுவதில் தவறில்லை. நான் யாருக்கும் பயப்படுவதில்லை. உண்மைகளைக் கூறுவதும், யாருக்கும் எதுக்கும் பயப்படாமல் செயல்படுவதும் என்னைப் பொருத்தவரை பெருமைக்குரிய செயல்தான் நண்பரே!

**

எஸ்.ராஜேந்திரன், திருநாவலூர்

சினிமா உலகம் உங்களை வெளியேற்றுகிறது என வைத்துக் கொண்டால் பழையபடி பஸ் கண்டக்டர் வேலைக்கு போவீர்களா?

பஸ் கண்டக்டர் வேலைக்கு மறுபடியும் போவது நடக்காத காரியம். சினிமா உலகம் வெளியேற்றினால் எனக்கு வாழ வழி தெரியும்!

**

வி.மெளலிவைரம், இடைப்பாடி (சேலம்)

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் யார்?

என் பெரியண்ணா சத்யநாராயணா, டைரக்ட்ர கே.பாலசந்தர், என் மனைவி லதா, என் செகரட்டரி முரளி, என் கூட ஒரு காலத்தில் பெங்களூரில் பணியாற்றிய டிரைவர் ராஜ்பகதூர்!

**

எம்.விமலா மாசிலாமணி, சீர்காழி

திருமதி லதா ரஜினி, எஸ்.ஜானகி இருவரில் யரௌடைய பாட்டு உங்களுக்குப் பிடிக்கும்?

லதா மங்கேஷ்கர்!

**

Krishnakumari, Shenoy Nagar, Madras-30

How does an actgor use his life experience in his work? Could you give an example?

We meet persons often with different characters and personalities. We come acrpss manay incidents and turning points in our own life. If we make a close study and observation of those characters and incidents that will be very good experience in our work. Ofcourse, I can quote many examples.

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com