‘அவர் பார்வையே சரியில்லை!’

அது ஒரு காதல் காட்சி. ஜெயலலிதா பிரபல நட்சத்திர நடிகையாகாமல் இருந்த காலத்தில் நடித்துவந்த ஒரு படத்துக்காகப் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது.
‘அவர் பார்வையே சரியில்லை!’
Updated on
1 min read

அது ஒரு காதல் காட்சி. ஜெயலலிதா பிரபல நட்சத்திர நடிகையாகாமல் இருந்த காலத்தில் நடித்துவந்த ஒரு படத்துக்காகப் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது.

அவரது காதலராக இணைந்து நடித்துவந்த நடிகர், ஜெயலலிதாவைவிடப் பிரபலமாக இருந்தார். இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில், சிறிது நேர ஓய்வின்போது ஜெயலலிதா படப்பிடிப்பு அறையைவிட்டு வெளியே வந்து தன் அன்னை சந்தியாவிடம், அம்மா அவர் (ஹீரோ) குடித்துவிட்டு வந்திருக்கிறார். ஒரே வாடை! பார்வையே சரியாக இல்லை! என்று சொல்லி முணுமுணுத்தார்.

சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டு ஜெயலலிதாவின் தாயார் மெல்லத் தன் மகளிடம் சொன்னார் –

‘டிரிங்க் சாப்பிட்டுவிட்டு நடிக்க எப்படி வரலாம் என்று அவரை நீயோ நானோ கேட்க முடியாது. அவருடன் தகராறு செய்துகொண்டு நடிக்காமல் வீட்டுக்குப் போய்விடுகிற அளவுக்கு இன்னும் நீ பிரபலம் ஆகவில்லை. ஆகவே, எப்படியாவது சகித்துக்கொண்டு நடித்துவிடு. முகத்தை மட்டும் அதிகமாக அவரது கைகளில் சிக்காமல் அப்படியும் இப்படியுமாக புரட்டி நடி. கைவிரல் நகத்தினால் ஒருவேளை அவர் உன் முகத்தைக் கீறிவிட்டால், முக லட்சணம் கெட்டுவிடும். ஒரு நடிகை முக்கியமாகக் காப்பாற்ற வேண்டியது முகம்தான்’.

அப்படியே அம்மாவின் அறிவுரை கேட்டு நடித்து முடித்தார் ஜெயலலிதா.

அந்த நடிகர் யார், படத்தின் பெயர் என்ன என்று நான் சொல்லப்போவது இல்லை. தன் மகள் ஜெயலலிதாவுக்கு அவரது அன்னை சந்திரா எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்து அறிவுரை புகட்டி உதவினார் என்பதுதான் முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com