சேது மாதவனுடன் சில நமிடங்கள்

சேது மாதவனுடன் சில நமிடங்கள்

டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவனை அவரது வீட்டில் சந்தித்த பொழுது, 'ஒப்போல்' மலையாளப்படம் தேசிய விருது பெற்றதறகாக பாராட்டிய பொழுது, மென்மையான புன்முறுவலடன் அதை ஏற்றுக் கொண்டார்.
Published on

டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவனை அவரது வீட்டில் சந்தித்த பொழுது, 'ஒப்போல்' மலையாளப்படம் தேசிய விருது பெற்றதறகாக பாராட்டிய பொழுது, மென்மையான புன்முறுவலடன் அதை ஏற்றுக் கொண்டார்.

தேசிய விருதுகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? நீங்கள் கூட அந்த தேர்வுக் குழுவில், இரண்டு முறை இடம் பெற்றிருத்ததாக ஞாபகம் என்றேன்.

பரிசு தேர்வுக் குழுவினரின் பெரும்பான்மை அபிப்ராயத்தை பொறுத்துத்தான் அளிக்கப்படுகிறது்நான் சொல்லப் போவது உங்களுக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம்.1980-ல் 'பசி'யில் நடித்ததிற்காக ஷோபாவை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள். அவருக்கு சாதகமாக முதலில் வாக்களித்தது வட இந்திய ஜூரி மெம்பர்கள்தான். பிறகுதான் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தார்கள் அதை ஆமோதித்தார்களாம்.

அவார்ட் வாங்க வேண்டுமென்றும் என்று நினைத்துதான் படமே தயாரிக்கிறீர்களா?

இல்லவே இல்லை.அவார்ட் வாங்கியிருக்கும் எந்த படத்திற்கும் இது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றியதே இல்லை.அதே நேரத்தில் அவார்டுக்காக ஒரே ஒரு படம் தயாரித்தேன்.ஆனால் அதற்கு அவார்ட் கிடைக்கவில்லை. அந்தப்படம்தான் 'கன்யாகுமரி'.

இந்த சந்தர்ப்பத்தில் மற்றொன்றையும் நான் கூற விரும்புகிறேன். அவார்ட் கிடைப்பது பெரும்பாலும் அதிர்ஷ்டம்தான்.பங்கு பெறும் படங்களில் சிறந்தது எது என்று மெஜாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.அதனால் திறமை சில நேரங்களில் புறக்கணிக்கப்படவும் சாத்தியமாகிறது.

பேட்டி: மாது.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.07.81 இதழ)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com