

"உங்களை சென்னை நகரில் சில முக்கியமான இடங்களுக்கு இப்பொழுது அழைத்துக் கொண்டு செல்லப் போகிறேன்" என்றதும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவது மாதிரியா? என்று கேட்டார் பாக்யராஜ் சிரித்துக் கொண்டே.
காரில் பேசிக்கொண்டே போனோம். சும்மா இல்லாமல் அவரது வாயைக் கிண்டிய பொழுது கிடைத்த விஷயங்கள்.
"சினிமாவில் நான் எழுதத் தொடங்கியதோ, நடிக்கத் தொடங்கியதோ பெரிய சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அல்ல .ஏதோ ஒரு ஆசை. எழுத வேண்டும், நடிக்க வேண்டும். அவ்வளவுதான். இருந்தும் டைரக்டர் கே.பாலசந்தரை நான் 'காப்பி' பண்ணுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சிலர் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைப்பதுதான் அவர்களுக்கு நியாயம். ! டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர் கே.பாலசந்தர் ஆகியவர்கள் பெரிய சிந்தனையாளர்கள். அவரகளது 'பாணி' எனக்கிலை. எனக்கு அந்த 'பாணியை' பின்பற்றும் எண்ணமும் இல்லை. அவகாசமும் இல்லை.
சிலர், ஆர்ட் பிலிம்! ஆர்ட் பிலிம்! என்று கூச்சலிடுகிறார்கள்! எது ஆர்ட் பிலிம்? தயாரிப்பாளர் டைரக்டர் இரண்டு பேரையும் சந்தோசப்படுத்துற பிலிம்தான் ஆர்ட் பிலிம் என்பதுதான் என் அபிப்ராயம் !" என்று அடித்துச் சொன்னார் பாககியராஜ்.
இப்படி பேசிக்கொண்டே 'வள்ளுவர் கோட்டம்' வந்து விட்டோம். அங்கு கார் நின்றதும் ரசிகர் கூட்டம் , "பாக்யயராஜ்! பாக்யராஜ்! என்று அவரது காரை சுற்றிக் கொண்டது.
பாக்கியராஜே அத்தனைப் பேரிடமும் கலகலப்பாகப் பேசினார்.
"எல்லோரிடமும் பிரீயாக பேசிப் பழகுகிறீர்களே" என்று கேட்டேன்.
இவர்களுக்காகவே நான் படமெடுக்கிறேன். இவர்களால்தான் நாங்கள் வாழ்கிறோம் என்றார் பாக்யராஜ்.
பேட்டி: ப்ரெய்ன் லால்
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.