

ராஜனை நான் முதல்ல சந்திச்சது 'கிழக்கே போகும் ரயில்' படத்துல அஸிஸ்டண்ட் டைரக்டராகத்தான். ஷூட்டிங் ஆரம்பிக்கிற அன்னிக்கு பாண்ட் , சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு டைரக்டர் பாரதிராஜாவோட லொகேஷன்ல போய் நின்னப்ப, "கதாநாயகி எங்க சார்" னுதான் ராஜன் பாரதிராஜாகிட்ட கேட்டார். மெதுவா என் பக்கம் கை காட்டினார் பாரதிராஜா. "யாரு இந்த பூசணிக்காயா கதாநாயகி?" ராஜன் என்னைக் காண்பித்து கேட்ட பொழுது வெகுண்டு போனேன் . இந்த ஆளை எப்படியாவது எந்த சந்தர்ப்பதிலியாவது பழி வாங்க வேண்டுமென்று மனதில் குறித்துக் கொண்டேன்.
மறுநாள் எடுக்கப்போகும் சீனை விவரித்து சொல்வதற்காக ராஜன் அன்று இரவு ஃபைலுடன் ரூமுக்கு வந்த போது, நானும் சக நடிகை உஷாவும் தீர்மானித்துக் கொண்டோம். சீரியஸாக சீனை ராஜன் விவரிக்கும் போதெல்லாம் "ஏன் உஷா அந்தப் புடவை நல்லாயில்ல? என்று நானும், அதே மாதிரி பதிலுக்கு அவளும் முழுக்க முழுக்க பேச்சை மாற்றி வேண்டுமென்றே மூன்று நாலு தடவை இக்னோர் பண்ணினோம். கோபம் பொத்துக் கொண்டு வந்தது ராஜனுக்கு ஃபைலைத் தூக்கி போட்டு விட்டு , "நாளைக்கு ஷூட்டிங்ல் டைரக்டர்கிட்ட பாட்டு வாங்கினாத்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்" என்று சத்தம் போட்டு விட்டுப் போய் விட்டார்.
படம் முடிஞ்சு டப்பிங் ஸ்டேஜ்ல எனக்கு யாரோட வாய்ஸ் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது , ராதிகாவே பேசட்டும், அவளைத் தவிர யார் வாய்ஸ் கொடுத்தாலும் இந்தக் காரெக்டருக்கு நிச்சயமா சூட் ஆகாது என்று அடித்துச் சொன்னவர் ராஜன்தான்.
ஆஸ் எ மேன், ராஜனைப் பத்தி சொல்லனும்னா, ஹீ ஈஸ் எ ஜெம். வெரி சாப்ட் ஸ்போக்கன். அவனுக்கு கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை.
ஸ்க்ரீன் ப்ளேயில ராஜன் அசாத்திய இன்டலிஜெண்ட். இவருக்கு பக்க பலமா இருக்கறது அதுதான்.வரிசையான வெற்றிக்கு ஆதாரம் அதுதான்
கண்டிப்பா இருக்க வேண்டியவங்ககிட்டயும் சாஃப்ட்டா இருக்கறதுதான் இவரோட பெரிய குறைன்னு எனக்கு தோணுது.
ராஜன்கிற மனிதரோட பிரண்ட்ஷிப் கெடச்சதுக்காகவும், ராஜன்கிற டைரகடரோட பரிச்சயம் ஏற்பட்டதுக்காகவும் நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். கொஞ்சம் கர்வம் கூடப்படுறேன்.
பேட்டி: உத்தமன்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.81 இதழ் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.