மனைவியை ஓர் எழுத்தாளராக….

சுருளிராஜன் தம்பதியினரின் வாழ்க்கை அன்பும், ஊடலும் மிகுந்ததாக இருந்தது. ஒரு சமயம் இருவரும் டி.வி.யில் ந
மனைவியை ஓர் எழுத்தாளராக….
Updated on
1 min read

சுருளிராஜன் தம்பதியினரின் வாழ்க்கை அன்பும், ஊடலும் மிகுந்ததாக இருந்தது. ஒரு சமயம் இருவரும் டி.வி.யில் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அது சுருளிராஜன் நடித்தது. படத்தில் அவருடைய மனைவியாக வருபருக்கு ‘லெட்சுமி; என்று பெயர். அந்த லெட்சுமியை சுருளிராஜன் ‘குரங்கே….பேயே…’ என்று திட்டுவதாகக் காட்சி வந்தபோது, மனைவி முத்துலெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘பார்த்தீங்களா? என்னைத் திட்டுறது போல ஒரு காரெக்டருக்கு என் பேரை வச்சுத் திட்றாரு’ என்று ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்தவர்களும் சுருளியும் பிராய்சைப்பட்டு அவரைச் சமாதானப்படுத்தினர்!

‘நீங்கள் ஏன் அடிக்கடி படங்களில் பெண் வேடம் போடுகிறீர்கள்?’ என்று நான் ஒருமுறை கேட்டதற்கு, ‘என் பொண்டாட்டிக்கே அதுதான் ஆசை. அவ எழுதின நாடகத்திலேயே எனக்குப் பெண் வேடம் கொடுத்திருக்காளே!’ என்று சுருளி சொன்னார்.

சில மாதங்கள் வரை சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த ‘சக்கை போடு போடு ராஜா’ என்ற நாடகத்தை முத்துலெட்சுமியே எழுதியிருந்தார். சுருளிராஜன் தன் மனைவியை ஓர் எழுத்தாளராக உருவாக்கிக் கொண்டு வந்தார். மற்றொரு நாடகமும் தன் மனைவி எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

சுருளிக்காக முத்துலெட்சுமி எழுதி வந்த நாடகம் முடிவதற்குள் 1980, டிசம்பர் 5-உடன் சுருளிராஜன் என்ற சிரிப்பு நாடகம், சோக நாடகமாக முடிந்துவிட்டதே!

  • மருதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com