

நத்திங் இஸ் இம்பாஸிபிள்!
படித்திருந்தால் டாக்டர்!
படிக்காததால் ஆக்டர்!
ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையிலே அள்ளி வீசப்படுகிற டிஸ்ரெஸ்பெக்ட்டை…அவமானத்தைச் சகித்துக் கொண்டு ஒவ்வொரு ஸ்டெப்பையும் முன்னே வைக்கிறார் என்றால் –
சிவாஜிராவ் தன் சொந்த வாழ்க்கையிலே இடையிலே வந்த பல கஷ்டங்களை விளையாட்டுத்தனமாக கடந்தவன்.
பஸ் கண்டக்டராவதற்கு முன்னாலே, ஸ்கூல் லைஃபுக்குப் பின்னாலே, அவன் என்ன வேலை பார்க்கலே?
பிரைவேட் கம்பெனியிலே வருகிற கஸ்டர்மஸுக்கு காபி, டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். எச்சில் க்ளாஸுகளைக் கழுவிக் கொண்டும் இருந்தான். அவனுடைய ‘ஜாப்’பின் பெயர் பியூன்!
பிறகு மரத்துண்டுகளை இழைத்துச் செதுக்கினான். மேஜை, நாற்காலிகளுக்கு வழுவழுன்னு பாலிஷ் போட்டான். அப்போ அவன் கார்பெண்டிங் டிரெய்னர். அந்தக் காய்ப்புகள் இன்னும் கையிலே இருக்கு.
அப்புறம் ஒர்க் ஷாப். அங்கே ஆல் இன் ஆல்…டூல்ஸை கிரஷனிலே ஊறப் போடுறதிலே இருந்து க்ரீஸ் போடுற வரை.
சுருக்கமாகச் சொன்னா திசை தெரியாத காட்டிலே, இலக்கு இல்லாத பயணத்தை மேற்கொண்டிருந்தான்.
பட், அவனோட ஸ்கூல் லைஃபிலே அவனுக்கு ஒரு மோட்டோ….லட்சியம் இருந்தது. டாக்டராக வேணும் என்கிற லட்சியம்.
புவர் – சிவாஜிராவ்! நல்லாப் படிந்திருந்தால் டாக்டராகியிருப்பான். படிக்காததினாலே ஆக்டராகிவிட்டான்!
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படக் கதையை கன்னடத்தில் எடுத்தாங்க. அதிலே கல்யாண்குமார் டாக்டராக நடித்திருந்தார். அந்த ரோலிலே நடிக்கணும்னு ரஜினிகாந்திடம் கேட்டபோது, அவருக்குப் பழைய நினைவுகள், விருப்பத்துடனேயே ஒப்புக் கொண்டார். அந்தப் படம் பிறகு தமிழிலேகூட டப் பண்ணி ரிலீசானது.
கன்னடப் படத்திலே நடிப்பதற்காக, தமிழ் ‘நெஞ்சில் ஓர் ஆலயத்தை’ இரண்டொரு முறை பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்மூலம் டைரக்டர் ஸ்ரீதரிடம் ரஜினி கொண்டிருந்த மதிப்பும் உயர்ந்ததுன்னு, இந்த நேரத்திலே சொல்லியே ஆகணும்.
சிவாஜிராவ் கர்னாடகா டிரான்ஸ்போர்ட்டிலே ஒர்க் பண்ணிட்டிருக்கும் போதுதான் முதன் முதலாக நடிப்புலகத்திலே கால் வைத்தான்.
டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் எல்லாம் கூடி ஒரு நாடகம் செட்டப் பண்ணினாங்க. நாடகம் பாரதக் கதையைப் பற்றியது. க்ரு சிவாஜியும் பங்கு பெறணும்னு சொன்னாங்க. சிவாஜிராவுக்கும் நடிக்க ஆசைதான். ஆனா, தான் விரும்புற ரோல் கொடுத்தால் நடிக்கிறதாக சிவாஜிராவ் சொன்னான்.
அவன் கேட்டது துரியோதனன் ரோல்!
மெயின் ரோலிலே நடிக்கிறவங்க பாடி நடிக்கணும்னு அப்போ ஒரு விதி. பாட முடியாதுன்னுட்டான் சிவாஜிராவ். அப்போ துரியோதனன் கிடையாதுன்னு சொன்னாங்க. துரியோதனன் இல்லாமே வேற எந்த ரோலிலேயும் நடிக்க முடியாதுன்னுட்டான். அப்போ நடந்த காரசாரமான அபிப்பிராய பேதத்துல சிவாஜிராவே ஜெயித்தான். துரியோதனனாக நடித்தான்.
விரும்பியது கிடைக்கலேன்னா சிவாஜிராவ் விடமாட்டான். திராட்சைப் பழம் உயரத்திலே இருக்குன்னு, ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’னு தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு போகிற பழங்காலத்து நரியல்ல சிவாஜிராவ்; எட்டாத அடியிலே கிடக்கிற தண்ணீரில் கற்களைப் போட்டு எட்டுகிற அளவுக்கு வந்தவுடனே தாகத்தை தணித்துக் கொண்ட முயற்சியுடைய புத்திசாலிக் காக்கா அவன்.
சிவாஜிராவ் வைக்கிற குறி தவறாது; தவறுகிற குறி வைக்கமாட்டான். ‘இது’ இல்லைன்னா ‘அது’ன்னு போகிற குணம், அட்ஜெஸ்ட்மெண்ட்….எப்போதுமே கிடையாது.
ஸ்கூல் லைஃபிலே சிவாஜிராவுக்குக் கிடைத்த முதல் போதனை தான் இந்தக் குணத்துக்குக் காரணம். ஸ்கூலிலே அவன் சேர்ந்ததும் அவன் காதிலே விழுந்தது ‘அகம் பிராம் ஹாஸ்மி’ என்கிற ஸ்லோகம் தான்.
‘நான் பிரம்மனின் அணுக்கள்’ –
அந்த வகையில் பார்த்தால் வி ஆர் கிரியேட்டர்ஸ்….நாமெல்லாமே படைப்பாளிகள் தான். இந்த மந்திரத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை. முயற்சி உங்களுக்கு இருக்குமானால் நீங்களும் படைப்பாளிகளே! உங்களால் முடியாதது ஒன்றூமில்லை.
ரஜினி உருத்திராட்சம் போட்டிருப்பார். அதற்கு மூன்று முகங்கள். மூன்று முகங்கள் உள்ள பொருள் என்ன தெரியுமா?
கடவுள் நம்பிக்கை –
தன்னம்பிக்கை -
சுயமுயற்சி –
இப்படித்தான் கருதுகிறார் உங்கள் ரஜினி.
நம் பிரதமர் இந்திராஜியும் உருத்திராட்சம் ஒன்று அணிந்திருக்கிறார். அதில் ஒரு முகம் உள்ளது. அது ரொம்பவம் பவர்ஃபுல்லானதுன்னு சொல்வாங்க. உருத்திராட்சம் பற்றிச் சொல்லும்போது இடையிலே இந்த விஷயம் ஞாபகம் வந்ததாலே இதைச் சொல்லாமே இருக்க முடியவில்லை.
குருஷேத்திரத்திலே இருந்துதான் சிவாஜிராவின் நடிப்பு வாழ்க்கை துவங்கினது, இன்று வரை பல குருஷேத்திரங்களைக் கண்டுவிட்டார் ரஜினி. இனியும் பல குருஷேத்திரங்களை ஃபேஸ் பண்ணவும் இருக்கிறார்.
ஆனால் ஜெயம் என்னவோ ரஜினிகாந்துக்குத்தான். ஜெயம் ரஜினிக்குரியது. அந்த நம்பிக்கை முயற்சி இருக்கிறது.
ஸோ, நத்திங் இஸ் இம்பாஸிபிள் இன் ஹிஸ் லைஃப்!
(முற்றும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.