ஜெயமாலினி வெட்கப்படுகிறார்!

வாகினி ஸ்டூடியோவில் ‘அமரகாவியம்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அதில் நடித்துக் கொண்டிருந்த
ஜெயமாலினி வெட்கப்படுகிறார்!
Updated on
1 min read

வாகினி ஸ்டூடியோவில் ‘அமரகாவியம்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அதில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை ஜெயமாலினியின் அம்மா சந்தித்துப்பேசிக் கொண்டிருந்தார்.

‘திருப்பதியிலே வைரத் தோடு காணாமல் போயிடுத்தாமே, பேப்பர்லே படிச்சேன்!’ என்றார் சிவாஜி ஜெயமாலினியின் அம்மாவிடம்.

‘நான் பேப்பர்லே நியூஸ் கொடுக்கலீங்க! எப்படியோ வந்திடுச்சு’ என்றார் அவர்.

என்னமோ தெரியலே1 சுவாமி எடுத்துக் கிட்டார்! அவ்வளவுதான்!’ என்றார் தொடர்ந்து.

‘பெண்ணுக்கு இங்கே ஷூட்டிங்கா?’ என்று கேட்டார் சிவாஜி.

‘பக்கத்து ப்ளோர்லே இருக்கா. டிரெஸ் சரியில்லே. உங்களைப் பார்க்கவே வெட்கமா இருக்காம் அவளுக்கு!’ என்றார் ஜெயமாலினியின் அம்மா.

‘ட்ரெஸ் சரியில்லையா? அவ எப்போது போடற டிரெஸ் தானே அது’! என்று கேலியாகச் சிரித்தார் சிவாஜி!

-சகுந்தலா மூர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com