முரட்டுக்காளை 100வது நாள் விழாவில்…

ஏவி.எம்.மின் ‘முரட்டுக் காளை’ 100வது நாள் விழா, ராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. பரிசு வாங்கிய
முரட்டுக்காளை 100வது நாள் விழாவில்…
Updated on
1 min read

ஏவி.எம்.மின் ‘முரட்டுக் காளை’ 100வது நாள் விழா, ராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. பரிசு வாங்கிய கலைஞர்களுடன் சிறு விளக்கமும் தரப்பட்டது புதுமையாக இருந்தது. அந்த விளக்கங்கள் இதோ –

ரஜினிகாந்த்

நடிப்பில் தனிப்பாணியை ஏற்படுத்திக் கொண்டதினால் குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களில் நடிக்க முடிந்தது. விநியோகஸ்தர்களின் உற்ற துணைவன். சென்ற ஆண்டு வெளியான படங்களில் ஒரு வெள்ளி விழாப் படமும், நான்கு நூறு நாட்கள் படமும் தந்தவர்.

ஜெய்சங்கர்

எங்கள் நிறுவனத்தில் அவர் நடித்த முதல் படம் குழந்தையும் தெய்வமும் ஏற்கனவே சதம் போட்டு, இப்போது 142 படங்களை முடித்திருக்கிறார். தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி வருபவர்.

தேங்காய் சீனிவாசன்

ரசிகர்களுக்கு நடிப்பால் தனி உற்சாகமூட்டக் கூடியவர். சமயம் கிடைக்கும்போது கதாநாயகனாக நடித்து வெற்றி பெறுவார்.

எஸ்.ஏ.அசோகன்

வில்லன், காமெடி, சீரியஸ்…எல்லாவற்றுக்கும் ரெடி!

வி.எஸ். ராகவன்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நாடகம் அவருக்கு உயிர்!

ஒய்.ஜி.மகேந்திரன்

திரையிலும் நடிப்பு, நாடகத்திலும் நடிப்பு

(மறைந்த சுருளிராஜன்)

சென்ற ஆண்டு வெளியான 113 படங்களில் 49 படங்களில் அதிகப்படியாக நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர் இவர். இந்த ஆண்டு இதுவரை வெளியான 22 தமிழ்ப்படங்களில் 12 படங்களில் இவர் பங்கு ஏற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com