பி.பானுமதியின் அவள் ஏற்றிய தீபங்கள்

கதை, திரைக்கதை, வசனம், இசை அமைப்பு, டைரக்‌ஷன், எடிட்டிங், தயரிப்பு…இத்தனை பொறுப்புக்களையும்
பி.பானுமதியின் அவள் ஏற்றிய தீபங்கள்
Updated on
1 min read

கதை, திரைக்கதை, வசனம், இசை அமைப்பு, டைரக்‌ஷன், எடிட்டிங், தயரிப்பு…இத்தனை பொறுப்புக்களையும் நமது பட உலகில் ஒருவர் ஏற்று, அதில் வெற்று காணுகிறார் என்றால் அவர் டாக்டர் பி.பானுமதி ராமகிருஷ்ணாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். அதனால்தான் அவருக்குப் பட உலகில் ‘அஷ்டாவதானி’ என்றொரு பெயரும் உண்டு.

அவரது பரணி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘அவள் ஏற்றிய தீபங்கள்’ விரைவில் வெளிவரவிருக்கிறது.

ரவீந்திரன், சரத்பாபு, ஸ்ரீபாணி, ராமதாஸ், ஜி.என்.சுவாமி, ஸ்ரீகீதா, சத்யகலா, அபர்ணா, சுருளிராஜன், அம்முக்குட்டி புஷ்பமாலா, சீதாலட்சுமி, சந்திரலேகா, ஆகியோருடன் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம், டைரக்‌ஷன், இசையமைப்பும் எடிட்டிங், தயாரிப்பு இத்தனை பொறுப்புக்களையும் ஏற்றுள்ள, டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணாவும் நடித்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசன், புலமைப்பித்தன் பாடல்களை இயற்றியுள்ளனர். இப்படத்தில் பானுமதி கதாசிரியையாகத் தோன்றி இரு பாடல்களையும் பாடி உள்ளார். ஆழமான கதையமைப்புடன், சிறந்த ஜனரஞ்சகப் படமாகவும் இதனை அவர் உருவாக்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com