

சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் ‘பராசக்தி’ என்பது எல்லோருக்கும் தெரியும். ‘சங்கிலி’ படத்தில் சிவாஜியுடன் அவரது மகன் பிரபு நடிக்கிறார். முதல் நாள் நடிக்கும் போது பிரபு பேசிய முதல் வசனம் என்ன தெரியுமா?
‘ஜெய் சக்தி’ என்பது தான்.
‘ஜெய் சக்தி! ஜெய் சக்தி!’ என்று இரண்டு தடவை அவர் சொன்ன காட்சி ‘சங்கிலி’க்காகப் படமாக்கப்பட்டிருக்கிறது. தந்தை நடித்த முதல் படம் பராசக்தி, தனயன் பேசிய முதல் வசனம் ஜெய்சக்தி.
பிரபு சங்கிலியில் நடிப்பது குறித்து வாகினி ஸ்டுடியோவில் ‘கார் டிரைவர் ராஜ்கண்ணு’ படப்பிடிப்பிலிருந்த சிவாஜியிடம் விசாரித்தேன். காளி சரண் இந்தியில் டேனி ஏற்றிருந்த வேடம் அது. பிரபு நடிப்பை புரஃபஷனாகக் கொள்ளவில்லை’ என்றார் சிவாஜி.
‘சங்கிலி’யில் சிவாஜியும் பிரபுவும் சண்டையிட்டு மோதும் காட்சி படமாக்கபடவிருக்கிறதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.