எல்லா காலத்துக்குமான கேள்வி! இதோ பதில்

எல்லா காலத்துக்குமான கேள்வி! இதோ பதில்
Updated on
1 min read

டி.வைத்தியநாதன், குற்றாலம்

கே: உங்கள் பத்திரிகையில் நடிகர், நடிகைகளின் முகவரி போடலாமே?

ப : சிலரது முகங்களில் ஏற்கனவே வரி இருக்கிறதே என்று தான் போடாமல் இருக்கிறோம்.

எம்.ஏ. தணிகாசலம், காஞ்சிபுரம்

கே: ஒரு நடிகை சுலபமாகக் கண்ணீர் விடுவது எப்போது?

ப : பெசரட் தோசையிலுள்ள முரட்டுப் பச்சை மிளகாயை நறுக்கென்று கடித்து விட்ட பிறகு!

என் சிவசங்கர், சிவகெங்கை

கே: சில நடிகைகளுக்குப் பின்னால் அவர்களுடைய தாயார்கள் படப்பிடிப்புக்கு வருகிறார்களே ஏன்?

ப : ஸ்டுடியோவின் எந்த மூலை முடுக்கில் இருந்தாவது திடீர் மாப்பிள்ளை கிளம்பி வராமல் தடுப்பதற்காக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com