பில்லா - மினி விமரிசனம்

பத்திரிகைகளில் பரபரப்பு ஏற்படுத்திய பில்லாவுக்கும் பாலாஜியின் பில்லாவுக்கும் உள்ள ஒரு முக்கியமான
பில்லா - மினி விமரிசனம்
Updated on
1 min read

பத்திரிகைகளில் பரபரப்பு ஏற்படுத்திய பில்லாவுக்கும் பாலாஜியின் பில்லாவுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேற்றுமை’ இவனுடன் ரங்கா இல்லாததுதான்! அதே போன்று இந்த பில்லா பம்பாயிலிருந்து வந்தவன் (அதாவது இந்தி ‘டான்’ என்பதும் குறிப்பிடத்தக்கது).

டைடில்கள் காட்டப்படும்போதே படத்தில் ரஜினிகாந்த் என்ன செய்து இருக்கிறார் என்பது தெரிந்துவிடுகிறது. அவரது கராத்தே ‘ஸ்ட்ரோக்’குகளை ஆங்காங்கே வெட்டி ‘ஸ்டாப் ப்ளாக்’ செய்து அளித்துள்ள எடிட்டர் வி.சக்கரபாணி, படத்தில் நடிக்காமலே நம் கண் முன் தோன்றி மறைகிறார்.

தக்க சமயம் பார்த்து, தன் அண்ணைக் கொன்ற பில்லாவைப் பழி வாங்குவதற்காக அவன் பின்னாலேயே சுற்றும் ராதாவாக, ஸ்ரீபிரியா நர்ஸ் வேடத்தில் கண்ணடித்து நம்மையும் கவர்ந்து விடுகிறார்.

பிரவீணா படத்துக்கே வீணாகத்தான் தெரிகிறார். அசோகனும் இருக்கிறார். ஆனால் அசட்டுத்தனம் இல்லை.

படத்தில் பெரும் பகுதி ஏமாற்றம். பில்லா போலீசை ஏமாற்ற, போலீஸ் டி.எஸ்.பி யே பில்லா கூட்டத்தினரை ஏமாற்ற, எல்லோருமாகச் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com