எங்களை விமரிசிக்கும் பத்திரிகைகள்! ரஜினிகாந்த் சொல்கிறார்...

நாங்கள் நடிக்கும் படங்களை மட்டுமல்ல; எங்களையும் விமரிசிப்பவர்கள் பத்திரிகைகள். இனிமேல் பத்திரிகைகளையே விமரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கலாம்! அதற்கு முன் உதாரணமாகிவிட்ட ‘சினிமா எக்ஸ்பிரஸுக்கு என்னுடைய ஹார்ட்ஃபுல் தேங்க்ஸ்!’
எங்களை விமரிசிக்கும் பத்திரிகைகள்! ரஜினிகாந்த் சொல்கிறார்...
Updated on
1 min read

நாங்கள் நடிக்கும் படங்களை மட்டுமல்ல; எங்களையும் விமரிசிப்பவர்கள் பத்திரிகைகள். இனிமேல் பத்திரிகைகளையே விமரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கலாம்! அதற்கு முன் உதாரணமாகிவிட்ட ‘சினிமா எக்ஸ்பிரஸுக்கு என்னுடைய ஹார்ட்ஃபுல் தேங்க்ஸ்!’

சில படங்கள் நாம் கொடுத்த பணத்திற்குத் தகுந்த திருப்தியை அளிக்காது – சில அளிக்கும் – வேறு சில படங்களுக்கு நாம் கொடுத்த பணமே நமக்குத் திருப்தியளிக்காது. கூடுதலாகவே கொடுக்கலாம் என்று தோன்றும். இந்தவகையில் நான் கடைசியாகச் சொன்ன ரகத்தைச் சேர்ந்தது ‘சினிமா எக்ஸ்பிரஸ். அதனுடைய பிரைஸுக்கு மேல் தரமுடையதாக இருக்கிறது. இது வாசகர்களுக்குக் கிடைத்த ஒரு ‘பிரைஸ்’ தான்!

சினிமாப் பத்திரிகை நிருபர்களுக்கு பஸ் பாஸ் வேண்டுமென்று தலையங்கம் தீட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன். இதை யார் உடனடியாகச் செய்து முடித்தாலும் நிச்சயம் அவருக்கு அந்தப் பெருமை கிடைக்கும்.

தொழில் திறமையுடைய நாலு பேரைப் பற்றியும் (மகேந்திரன் பேட்டி) வந்திருக்கிறது. புதியவர்களைப் பற்றியும் (விஜய் பேட்டி) வந்திருக்கிறது – பழையவர்களைப் பற்றியும் (கே.டி.ருக்மணி பேட்டி) மறக்காமல் வந்திருக்கிறது. ருக்மணி அந்தக் காலத்தில் செய்த சாகசங்களைக் கண்டு ரியலி ஐ வாஸ் சர்ப்பிரைஸ்டு! அதே நேரத்தில் மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஒரே மாதிரி கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிட்டிருக்கும் ‘சினிமா எக்ஸ்பிரஸுக்கு’ என் பாராட்டு.

படங்களில் நகைச்சுவைப் பகுதிகள் வந்து கலகலப்பு ஊட்டுவது போல, பத்திரிகையின் இடைஇடையே ‘சரடு’, இப்படிச் சொல்லலாமா? ‘நிருபர் நகர்வலம் வருகிறார், நட்சத்திரங்களைச் சுற்றி’ மற்றும் ஏராளமான சிறியதும் பெரியதுமான செய்தித் துணுக்குகள் போன்றவை இடம்பெற்று ‘போரடிக்க’ வழி இல்லாமல் செய்துவிட்டது.

கண்களுக்கு இனிமையாக நிறையப் படங்கள், குறிப்பாக சென்டரில் உள்ள ப்ளோ-அப். பக்கங்களில் அமைப்புகள் இருக்கின்றன. ஆக, எல்லாவற்றிலும் தரம் கீப்-அப் பண்ணப்பட்டிருக்கிறது.

கலைஞர்களின் சொந்த வாழ்க்கையில் உள்ள தேவையற்ற பிரச்னைகளை அலசிக் கொண்டிராமல், இப்படியே தொடர்ந்து ஃபிலிம் இண்டஸ்ட்ரி மேலும் முன்னேற, ‘சினிமா எக்ஸ்ப்ரஸ்’ ஒத்துழைப்புத் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது என் அவா.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com