எந்தக் கலைஞர்களாக இருக்கட்டும் அவர் புகழில் இருக்கும்போதே ரிடையர் ஆக வேண்டும். புகழைக் கெடுத்துக் கொண்டபின் ரிடையர் ஆகக் கூடாது. புதுக் குரல்களை அறிமுகப்படுத்த, ஊக்குவிக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் இந்தத் துரிதத் தயாரிப்புக் காலத்தில் யார்தான் நேரத்தை வீண்படுத்த விரும்புவார்கள்? லதாவிற்கு அம்பது வருடங்களாகியும், அது வரப்பிரசாதம். ஆனால் அவருக்குப் பின் ஒருவருமே இல்லை என்று கூறவும் முடியாது. லதாவைப் போல பாடமுடியாவிட்டாலும் வேறு யாராவது ஒருவர் தனது ஃபேஷனில் பாடி, பாபுலர் ஆகலாமே?
நேருவிற்குப் பிறகு இந்தியாவை நினைத்தே பார்க்க முடியவில்லை என்றார்கள். இன்னும் இந்தியா நல்ல நிலமையில் தான் உள்ளது. அதே போல் லதாவிற்குப் பின் வேறு யாராவது வருவார்கள். ஆனால் லதாவின் இடம் லதாவிற்குத்தான்.
-எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.