ஆச்சரியங்கள் அள்ளித் தரும் ஜீனத்!

ஜீனத் அமனை நான் சந்திக்க போயிருந்த போது அவர் பேண்ட் அணிந்து கால்மேல் கால் தூக்கிப் போட்டவாறு
ஆச்சரியங்கள் அள்ளித் தரும் ஜீனத்!
Updated on
1 min read

ஜீனத் அமனை நான் சந்திக்க போயிருந்த போது அவர் பேண்ட் அணிந்து கால்மேல் கால் தூக்கிப் போட்டவாறு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் தன்னைப் பற்றிய தவறான செய்தியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விடப் போகிறாரே என்று எண்ணியோ என்னவோ, எக்ஸ்க்யூஸ் பண்ணுவதற்கு என்ன இருக்கிறது? ஆங்கிலச் சம்பிரதாயப்படி தன்னுடைய பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டிருக்கும் ஜீனத் சிகரெட் புகைத்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. பேட்டிக்கு அவர் மிகச் சுவாரசியமாகப் பதில் அளித்து அவசரத்தோடு, ‘இப்பொழுது புனே (பூனா) புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ராஜ்கபூரின் சத்தியம் சிவம் சுந்தரம் படத்தை அவரது தோட்டத்தில் திரையிட்டுப் பார்க்கிறார்கள். என்னுடன் படம் பார்க்க நீங்களும் புனே வருகிறீர்களா? என்னுடைய காரில் படம் பார்க்க அழைத்துக் கொண்டு போகக் கூடிய உரிமையை அவரே எடுத்துக் கொண்டதும் இன்னும் பல ஆச்சரியங்களை எனக்கு உண்டாக்கினார்ல். ‘ஸாரி…இன்றிரவு மெட்ராஸுக்குத் திரும்பப் போகிறேன்’. என்றேன். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகப் பழகிய நடிகைகள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். மனம் விட்டுச் சில வார்த்தைகளைப் பேசக் கூடத் தயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பம்பாய் படவுலக ஜீனத் இன்னமும் என்னை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

-ரேவதிகாந்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com