

நிச்சயமாக. ஆகவே பாமர மனிதனும் படத்தை உருவாக்குபவரும் உண்மையில் ஒன்றுதான். அவர்களுக்கிடையே இடைவெளியில்லை. என்னைப் பொறுத்தவரையில், மக்களைச் சென்று அடையாத எதையுமே நல்ல பொருள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்னுடைய படங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதால் நான் இப்படிக்கூறவில்லை. நாளையே என்னுடைய படத்தை அவர்கள் ஏற்காவிட்டால், என்னுடைய படத்தில்தான் ஏதோ தவறு என்று எடுத்துக் கொள்வேன். அவர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒன்று – அவர்களுக்குப் பொருந்தாத ஒன்று – பல சமயங்களில் ’புதிய சினிமா’ என்று அழைக்கப்படுகிறது.
காஸரவல்லியின் ‘கட்டசிராத்தா’ (கன்னடம்) படத்தைப் பார்த்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் பார்ப்பவருக்கும் படத்துக்கும் இடையே அதில் ஏதோ ஓர் உறவு இருந்தது.
சமீபத்தில் அவருடைய ‘அக்ரமணா’ படத்தைப் பார்த்தேன். அதில டைரக்டரின் கைவண்ணத்தை மட்டுமே காணமுடிந்தது. டைரக்டர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை மட்டுமே வெளிப்படுத்த விரும்புவதால் அது புரியாததாக ஆகிவிடுகிறது. அம்மாதிரியும் ஒரு படத்தை எடுக்கக் கூடாது என்றும் கருதுகிறேன். ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை ஒரு படம் கவரவில்லை என்றால், நம்முடைய முயற்சி வீணாகிவிடுகிறது. அந்தப் பொருள் நல்லப் பொருள் அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.