

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தேர்தல் காலங்களில் தம்முடைய இரண்டு விரல்களை மக்களுக்கு மத்தியில் காட்டியபொழுது அது இரட்டை இலை சின்னத்தை மட்டுமே குறிக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் அப்படி நினைக்கவில்லை. ‘அரசியலிலும், சினிமாவிலும் நான் இருப்பேன்’ என்பதையும் அவர் இரு விரல்கள் அடையாளமாகச் சுட்டிக் காட்டியதாகவே கருதுகிறோம்.
அந்த முடிவோடு மக்கள் திலகம் மக்களுக்கு மத்தியில் மகத்தான் அரசியல்வாதியாகவும், மாபெரும் கலைஞராகவும் திகழ்கிறார்.
வரப் போகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் விரைவுப் படமொன்றைத் தேவையான கருத்துக்களோடு தமிழில் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
அது தேர்தலுக்கு முன் தயாராகிவிடுமா, அல்லது தேர்தலுக்குப் பிறகுதான் உருவாகுமா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், எம்.ஜி,ஆரின் இலட்சியப் படமொன்று கூடிய விரைவில் வெளிவரும் என்று நாம் நம்புகிறோம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும் திட்டமிட்டுத் திறம்படச் செயலாற்றக் கூடியவர். பதவியில் இருந்தாலும் சரி, சினிமாக் கலைஞராகப் பணியாற்றினாலும் சரி மக்களின் நலனே தம் வாழ்வின் குறிக்கோள் என்பதாக வரதுஇதயத் துடிப்பு இருந்து வருகிறது. வாய்ப்பு வரும் போதெல்லாம் மக்களின் துயர் துடைக்க அவர் ஓடோடி வருவது வழக்கம். அதனால் தான் ‘எம்.ஜி.ஆர்’ எங்கள் தலைவர்’ என்று இலட்சோப லட்சம் மக்களின் இதயக் குரல் ஒலிக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த படம் அண்மையில் வெளிவரவில்லை என்ற ஏக்கம் கொண்ட ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அவரிடமிருந்து விரைவில் வெளிவரும் என்றூ எதிர்பார்க்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.