

என்னை மணக்க விரும்பி ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதைப் போல வந்த பிற நூற்றுக்கணக்கான கடிதங்களில் ஒன்றாகத்தான் நான் அதை நினைத்திருந்தேன். ஆனால் விஷயம் நிஜமாகவே விபரீதமாகப் போய்விட்டது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெரியவர் வந்தார். கூடை நிறைய பழம், பூ, வெற்றிலை பாக்கு சகிதமாக வந்த அவர் என் அப்பா முன்னால் அதை வைத்துவிட்டு, ‘எங்கே உங்கள் ஆட்கள் யாரையும் காணோம்?’ என்று கேட்டார். ஏன் எதற்குக் கேட்கறீர்கள்? என்று அப்பா திருப்பிக் கேட்டார். ‘நான் தான் லெட்டர் போட்டிருந்தேனே! இன்றைக்கு இந்த மணி நேரத்தில் என் பையனுக்கு உங்கள் பெண்ணை மணம் முடிக்க நிச்சயதார்த்தம் செய்ய விருப்பம் தெரிவித்து எழுதியிருந்தேனே!’ என்றார்.
என் புகைப்படத்தை அவருடைய மகன் அவருக்கு அனுப்பி திருமணம் பேசச் சொல்லி என் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதை நம்பிய அவருடைய அப்பா நிச்சயதார்த்த நாள் குறித்து கடிதம் எழுதியதோடு நேரிலும் வந்துவிட்டார். அவர் எழுதியிருந்தது வாஸ்வதம் தான். என்றாலும் அது இவ்வளவு சீரியஸாக போகும் என்று நான் நினைக்கவே இல்லை. யாரோ சும்மா தமாஷுக்கு எழுதியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். அந்த மனிதருக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.