

மாம்பலம் பாண்டி பஜாரில் நடந்து போய்க் கொண்டிருப்பவர்கள் எல்லாரும் சினிமா நடிகர்கள் ஆவதில்லை. ஆனால் சுதாகர் சினிமா நடிகர் ஆகி இருக்கிறார்.
‘நான் அதை எதிர்ப்பார்க்கவில்லை. யாரோ என்னைச் சினிமாவில் சேருமாறு சொன்னார்கள். டைரக்டர் பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் அதிகமாகக் கூட என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அவரது பார்வையில் பட்ட நான் இப்பொழுது ரசிகர்களின் பேராதரவோடு பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்று நன்றிப் பெருக்கோடு சுதாகர் தன் வாழ்க்கை வரலாற்றைப்பல பத்திரிகைகளில் ஒரேவிதமாகச் சொல்லி இருந்தாலும், அதுதான் உண்மை என்று நம்பும்படி இருக்கிறது.
நிற்க நேரமில்லை என்பார்கள். அதிகமான வேலை உள்ளவர்கள். ஆனால் இப்போது சினிமா நடிகர்களில் இவருக்குத்தான் நிற்க நேரமில்லை. இவர் நிற்பதை நாம் எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் அது கேமராவுக்கு முன் நிற்பதாகத்தான் இருக்கும்.!
அமைச்சர்கள், சுற்றுப் பயணத் திட்டங்கள் போட்டுக் கொண்டு, பல ஊர்களுக்குச் சென்று வருவது போல இந்த சுதாகரும் பல கால்ஷீட்டுகளுக்கு தேதி தந்து கொண்டு பல ஊர்களில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.
சென்னை ஸ்டூடியோக்களில் என்றாவது இவருக்குப் படப்பிடிப்பு இருக்குமா என்பது கேட்கவேண்டிய ஒரு கேள்வி. மிகக் குறைவு என்று சுதாகர் சொல்ல வேண்டிய பதிலாக இருக்கும்.
கிழக்கே போகும் ரயிலில் வந்த சுதாகர் சென்னைக்கு அடிக்கடி வெளியூர்களில் இருந்து ரயிலில் வந்து இறங்கிக் கொண்டு இருக்கிறார். கோடம்பாக்கம் போகும் ரயிலில் மட்டும் இவர் ஏறியதில்லை!
நடிகர்களில் நல்லவர் சுதாகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.