சிவாஜி ராவ் to ரஜினிகாந்த் – 2

சில மந்திரங்கள் சுலோகங்களை அடிக்கடிச் சொல்லும் போது நம்மோட ஆத்மாவுக்கு ஒரு ஸ்ட்ரந்த் கிடைக்கிறாப்
சிவாஜி ராவ் to ரஜினிகாந்த் – 2
Updated on
3 min read

என்ன சொல்லிட்டு வந்தேன்? ம்…..என்….கனகராஜ்….

But now he is not Kanaka Raj. He is Raghavendra!

சில மந்திரங்கள் சுலோகங்களை அடிக்கடிச் சொல்லும் போது நம்மோட ஆத்மாவுக்கு ஒரு ஸ்ட்ரந்த் கிடைக்கிறாப் போல, சில பெரியவங்களோட பெயரை அடிக்கடி நினைக்கிறதாலேயும் கிடைக்கும். ராகவேந்திரானு பெயரை ரஜினி மாற்றி அமைச்சிட்டார்.

இதிலிருந்தே அந்த ராகவேந்திரா ரஜினிக்கு எவ்வளவு ஹார்ட்லியான நேம் என்கிறதைப் புரிஞ்சுக்கலாம். அவரோட போட்டோவுக்கு முன்னாலே ஃப்யூ செகண்ட்ஸாவது நிண்ணு டீப் மெடிட்டேஷன் பண்ணிட்டுத்தான் ரஜினி ஷூட்டிங்கிங்கிற்குப் புறப்படுவார். மேக்கப் ரூமிலேயும் மெடிட்டேஷன் தான். கண்ணாடிக்கு முன்னாலே நின்னு ஸ்பாஞ்சை எடுத்து நெற்றியிலே வச்சிக்கிட்டு சில சமயங்கள்லே லாங் மெடிட்டேஷனே பண்ண ஆரம்பிச்சிடுவார்.

ராகவேந்திரா சுவாமிகள் பேராலே நிறைய மடங்கள் இருக்கு. 300 வருஷங்களுக்கு முன்னே வாழ்ந்து, இன்னிக்கும் அருள் பாலிக்கிற ஒரு சந்நியாசி ஆந்திராவிலே ஆதோனி என்கிற இடத்திலே அவரோட மந்திராலயம் இருக்கு. இந்த மந்திராலயத்துக்குப் போகும் போது, அந்த சுவாமிகளைத் தியானம் பண்ணும்போது புதிய ரத்தம், புதிய எண்ணம் உண்டாகுது. தன்னம்பிக்கை ஏற்படுது. தன்னம்பிக்கை இல்லாதவர்கிட்டே தன் முயற்சி இருக்காது. எமர்சன் சொன்னது போல, Self trust is the essence of heroism, இல்லையா?

1973-ல் சிவாஜி ராவ் எஸ்.ஐ எப்.சி.சி ஸ்கூல் ஆஃப் பிலிம் ஆக்டிங்கில் டூ இயர்ஸ் கோர்ஸில் சேர்ந்து படிச்ச போது அப்படி ஒண்ணும் அவன் பிரைட் ஸ்டூடண்ட்னு சொல்ல முடியாது.

அதோட எப்படி நடிக்கிறதுன்னு அங்கே கறுக் கொடுக்கலே. எப்படி நடிக்கக் கூடாதுன்னு கற்றுக் கொடுத்ததா சொல்லலாம். ஒரு பெர்ட்டிகுலர் எமோஷனை தன் சொந்த இமேஜினை யூஸ் பண்ணி ஆக்ட் பண்ணத் தூண்டினாங்க. ஸ்டானிஸ்வால்ஸ்கியின் மெத்தட் படி உடலையும் மனசையும் ஒரு கண்ட்ரோலிலே வச்சிருக்கச் சொல்லிக் கொடுத்தாங்க.

நாலு பேரோட ஒருத்தனா சிவாஜிராவ் இருந்தும் அங்கே தி கிரேன் பாலசந்தரைச் சந்திச்சப்போ அந்த தன்னம்பிக்கையோட தான் அவருக்க்கு அறிமுகமானான்.

அவரைப் பார்த்தவுடனே சிவாஜி ராவுக்கு அவரை ரொம்பப் பிடிச்சிட்டது.

First impression is the best impressionனு சொல்றது போல அமைஞ்சிட்டது. அவருடைய திறமைக்காக மட்டுமல்ல நிறத்துக்காகவும்!

ஆனா சின்ன வயசில தன்னோட கறுப்பை நினைச்சி சிவாஜிராவ் எவ்வளவு மன வேதனைப் பட்டிருக்கான் தெரியுமா? அம்மா மாதிரி தானும் சிவப்பா இல்லையேன்னு வருத்தப்பட்டிருக்கான்.

ஏன் ‘அபூர்வ ராகங்கள்’ ஷுட்டிங்கிலேயே கமலஹாசனை வெரி ஃபர்ஸ்டு சந்திச்சப்போவும் அந்த வருத்தம் ஏற்பட்டிருக்கு.

சிவாஜிராவோட அம்மா நல்ல சிவப்பு. உயரம். அப்பா கறுப்பு, குள்ளம். சிவாஜி ராவ் உயரத்திலே அம்மா மாதிரி, நிறத்திலே அப்பா மாதிரி.

டைரக்டர் பாலசந்தர் நிறத்திலும் அப்பா அப்பா மாதிரி – ‘விஷ் யூ ஆல் தி பெஸ்ட்’னு வாழ்த்துக் கூறினதோடு நிக்காமே, ‘அபூர்வ ராகங்கள்’லே ஒரு சான்ஸ் கொடுத்ததோட கடமை முடிஞ்சு போச்சுன்னு நினைக்காமே, மூன்றூ முடிச்சு, அவர்கள்னு அடுத்தடுத்து மூணு படங்கள்லே சான்ஸ் கொடுத்து, ஃபியூச்சருக்கு ஒரு நல்ல ஃபவுண்டேஷன் போட்டுக் கொடுத்ததினாலேயும் அப்பா மாதிரி –

சிவாஜிராவ் பெயரை மாற்றி, ‘ரஜினிகாந்த்’னு புதுப் பெயர் சூட்டினதாலேயும் அப்பா மாதிரி!

பெயர் மாற்றம் ஒரு ஹோலிப் பண்டிகையின் பெளர்ணமியிலே நடந்தது.

ரஜினிகாந்த் வீட்டுக்குப் போங்க, முன் ஹாலிலே மூன்று படங்கள் மாட்டியிருக்கும். ஒண்ணு டிராயிங் பண்ணப்பட்ட ஒரு இங்கலீஷ் லேடியோட பிக்சர், இன்னொரு பிக்சர் ஃபளவர்ஸ். இது தவிர ஒரே ஒரு போட்டோதான். அது டைரக்டர் பாலசந்தரோடது.

வேற யாரா இருந்தாலும் பெயரை மாற்ற சிவாஜிராவ் ஒருபோது சம்மதிச்சிருக்க மாட்டான். ஏன்னா… அவன் ஸ்கூல்லே படிக்கிற காலத்திலே அவனுக்குப் பிடிச்ச சப்ஜெக்ட் ஹிஸ்ட்ரி. அதிலே அவனுக்குப் பிடிச்ச லெஸன் சத்ரபதி சிவாஜி!

சிவாஜியோட பரம்பரைன்னு சிவாஜிராவ் பெருமையோடச் சொல்லிக் கொள்கிறதும் உண்டு. அந்தப் பெயரை மாற்ற, இழக்க எப்படி அவன் சம்மதிப்பான்.

He accepted only for the great Balachander!

இருந்தாலும் ரஜினிகாந்த் என்கிற பெயரில் ஒரு செண்டிமெண்டல் இருக்கு.

ப்ளீஸ் கீப் ஹோல்ட் ஆஃப் திஸ் மேட்டர் ஃபார் ஏ ஒய்ல். மானேஜர் யாருடனோ வர்றார்.

‘சார், இவர் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டிருக்கார். உங்களை நேர்ல பார்த்து விஷயத்தைச் சொல்லணும்னு….;

‘ஓ…யெஸ். சொல்லுங்க’

‘வந்து….சார்….எனக்கு ஸ்டேஷன் பக்கத்திலே ஒரு ரெண்டு கிரவுண்ட் இருக்கு. அருமையான பிளாட். சேல்ஸ் பண்ணலாம்னு நினைச்சிருக்கேன். அது உங்களுக்கு யூஸ்ஃபுல்ல இருக்கும்…’

‘தேங்க்யூ. படி அப்படி ஒரு ஐடியா இப்போ எனக்கு இல்லே. நீங்க வேற யாரிடமாவது ட்ரை பண்ணுங்க. ஓ.கே…நீங்க போகலாம்.’

தென்…மை டியர்ஸ் நம்ம மேட்டருக்கு வரலாமா?

எஸ்…‘ரஜினிகாந்த்’ பெயரிலே இருக்கிற செண்டிமெண்டல்…

ஃபாதர் ரானோஜே ராவ்!

மதர் ராம்பாய்!

சன் ரஜினிகாந்த்!

இந்த மூணு பெயருக்கும் ‘R’ தானே ஃபர்ஸ்ட் லெட்டர்!

சிவாஜிராவ் அவனோட பெற்றோருக்கு நாலாவது மகன். ஃபர்ஸ்ட் நாகேஷ். மிலிட்ரியிலே இருக்கார். செகண்ட் சத்யநாராயணா. ஹெச்.எல்.ஃபாக்டரியிலே இருக்கார். தேர்ட் அஸ்வத்தாமா கல்யாணம் ஆகிட்ட சிஸ்அர். இப்போ ரீசண்டா தான் பெங்களூர்லே இருந்து இங்கே வந்திருக்கு.

சிவாஜிராவ் கடைசிப் பையன் – கடைசி மாதம் டிஸம்பரிலே பிறந்தவன். நேரம் கூட அநேகமா கடைசி தான் – லெவன் ஃபார்ட்டி ஃபைவ் பி.எம்.

ஆல்மோஸ்ட் எல்லாம் கடைசிதான்!

ஆக்டிவிட்டிசும் அப்படியே தான் இருந்துச்சு.

கவிபுரம் எலிமெண்டரி ஸ்கூல்லே இருந்து இப்படிச் சொல்லலாம்.

கோலி விளையாடுவான். கோலிக் குண்டாலே கோள் மூட்டினவன் மண்டியிலே அடிச்சிருக்கான். கிரிக்கெட் விளையாடுவான். வம்புக்கு வர்றவனை கிரிக்கெட் பேட்டாலேயே தாக்கியிருக்கான். வம்புக்கு வந்தவனை விடுகிற பழக்கம் சிவாஜி ராவுக்குக் கிடையாது.

அந்தத் தொட்டில் பழக்கம் ரஜினிகாந்தை இன்னமும் விடலே. But he is trying to mend himself. இதன் மூலமா தேவையில்லாத ப்ல தொல்லலிகளையும் அனுபவிச்சிருக்கார்.

அது என்னன்னு உங்களுக்குத் தெரியாதா?

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com