கோடம்பாக்கம் கோலிவுட்!

அம்பாசிடர் காரில் ஒயிலாகச் சாய்ந்தபடி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், கேமராமேன் பாபு ஆகியோருடன்
கோடம்பாக்கம் கோலிவுட்!
Updated on
1 min read

ஏ.வி.எம் ஸூடியோவின் நுழைவாயிலில் –

அம்மாசிடர் காரில் ஒயிலாகச் சாய்ந்தபடி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், கேமராமேன் பாபு ஆகியோருடன் ஏதோ சீரியஸாக டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தார் சுமலதா.

அருகில் சென்று ஒட்டுக் கேட்டபோது, தன் அக்கா ரேணுகா, படத்தில் நடிக்க இருப்பதைப் பற்றி பேச்சு அடிபட்டது. ஆனால் அப்போது சுமலாதாவின் முகம் வாடி இருந்ததற்குக் காரணம் அது அல்லவாம்! காலை முதல் வெறும் வயிற்றோடு ‘கழுகு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட களைப்பும் பசியும் தானாம்.

ஹூம்…பசிக்குது சார் என்று சுமலதா செல்லமாகச் சிணுங்கினார். உடனே இலை போடப்பட்டது.

வெறும் பேச் ஒர்க் தான். அதை முடித்துக் கொண்டு அம்போவென்று அனுப்பி இருக்கலாம். ஆனால் எஸ்.பி.எம் அப்படிச் செய்யவில்லை. மனம் நிறைந்த அவர் மற்றவர் வயிற்றையும் நிரப்பியே அனுப்புகிறார்.

புறப்படும்போது பாபு சொன்னார். ‘சார், சுமலதாவைப்பற்றி நல்லா எழுதுங்க சார். அது நம்ம ஆர்டிஸ்ட்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com