சினிமா கேள்வி பதில்

இப்போது படவுலகில் புகுந்து கொண்டிருக்கும் மேனகாக்களையும், திலோத்தமாக்களையும், ரம்பைகளையும்
சினிமா கேள்வி பதில்
Updated on
1 min read

பு.பத்மநாபன், சிதம்பரம்

ஊர்வசி சாரதா எப்படி இருக்கிறார்?

இப்போது படவுலகில் புகுந்து கொண்டிருக்கும் மேனகாக்களையும், திலோத்தமாக்களையும், ரம்பைகளையும் பார்த்துவிட்டுப் பேச முடியாமல் இருக்கிறார்!

***

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (சேலம்)

ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை….

செய்யுங்களேன்! இப்போது திடீர் திடீர் என்று டைரக்ட் செய்ய வருகிறர்வர்களை விட நீங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவராக இருக்க மாட்டீர்கள்!

தாங்கள் யாருடைய விசிறி?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்ப் படத்துக்கு விமரிசனம் எழுதிய பேராசிரியர் வெள்ளைத் திரையைச் சித்திரமாக வெளியிட்டு, ‘இந்தப் படத்தில் இதுதான் தெரிந்தது’ என்று எழுதினாரே, ‘கல்கி’ அவர்களுடைய விசிறி.

**

பி.அண்ணாதுரை, பாக்கம்

தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் ஏன் அட்வென்சர் படங்களைத் தயாரிப்பது இல்லை?

அவர்கள் படங்களை முடித்து வெளியிடுவதே அட்டுவென்சர்தானே?

முத்து, திருச்சிற்றம்பலம்

நடிகையின் முதல் எதிரி யார்?

அவரது மேக் அப் இல்லாத முகம்

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com