சிவாஜிராவ் To ரஜினிகாந்த்

அந்தத் தொல்லைகள் உங்களுக்குத் தெரியாட்ர்ஹா? ரஜினிக்குப் பைத்தியம் என்று மெடிக்கல் சர்டிபிகேட்
சிவாஜிராவ் To ரஜினிகாந்த்
Updated on
1 min read

அந்தத் தொல்லைகள் உங்களுக்குத் தெரியாட்ர்ஹா? ரஜினிக்குப் பைத்தியம் என்று மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்தாங்க. ஃபியூச்சரே கிடையாது என்றுஜோசியம் சொன்னாங்க. பில்லி. சூனியம் வைத்துவிட்டதாகச் சொன்னாங்க – வைத்தது யார் என்றும் சொன்னாங்க – ரஜினிக்கு இதை எல்லாம் இன் டைரக்டாகவும் தெரிவிச்சாங்க டைரக்டாகவும் தெரிவிச்சாங்க.

ஏன்? இப்பவும் கூட என்னென்னவோ…இண்ட்ரஸ்டிங் நியூஸெல்லாம் வருது!

இதுக்கு மேலே அந்த டீட்டெயில்ஸைச் சொல்ல விரும்பலே. உங்களிடம் பழைய நியூஸ் பேப்பர் இருந்தா ஒன்ஸ் எகெய்ன் படிச்சுப் பாருங்க.

ரஜினிக்கு இதிலே வருத்தம் இல்லே.

He does certain gimmicks on the screen. Why? Just to attract people. So also the press has to attract the readers.

அதனால ஜனங்களைக் கவர ரஜினி சில சித்து விளையாட்டுகளைச் செய்றது போல, தங்களோட ரீடர்ஸ்களைக் கவர, பத்தீர்கைகளும் ரஜினியைப் பற்றி என்னென்னவோ ஓவர் டோஸ்லே எழுதுதுங்க! செய்துட்டுப் போகட்டுமே?

Why should Rajini bother?

பட் ஒன் திங். நெருப்பில்லாமே புகையலே. இதற்கு யாரையும் பொறுப்பாளியாக்கவும் நினைக்கலே. அந்தப் பொறுப்புக்குரியவன். Only one man, that is Shivaji Rao! சிவாஜி ராவ்தான்.

ரஜினிகாந்தின் ஆக்டிங் ஃபாஸ்டாக இருக்கு. இது நீங்க ஒப்புக் கொண்ட விஷயம்.

ஆக்டிவிட்டீஸ்?

அது அவரைப் பற்றியும் பேப்பர் நியூஸ் போல ஓவர் டோஸ்லேதான் இருந்தது!

Over work. So over drink. So, over…you know what!

ரஜினியோட ப்ரிவியஸ் லைஃப், அதாவது சிவாஜி ராவோட லைஃப் அதுக்கு முன்னோடியா இருந்தது.

அதுதான் அவனைக் கடைசி மாசத்திலே, கடைசி நேரத்திலே பிறந்த, கடைசிப் பையன் என்று ஆரம்பத்திலேயே சொன்னார் உங்க ரஜினி.

சிவாஜிராவ் ஏறிக் குதிக்காத சுவரில்லே; போதை ஏறக் குடிக்காத சாராயமில்லே! அவன் என்ன செய்யலே?

திருடியிருக்கான்; சினிமா பார்க்கத்தான்!

‘பளீர் பளீர்னு அடி வாங்கியிருக்கான்; பெல்ட்டினாலேதான்!’

சிவாஜிராவோட அப்பா கடமை தவறாத ஒரு கான்ஸ்டபிள் என்கிறதை இந்த இடத்திலே நீங்க நினைச்சால் போதும். பெல்ட் அடி எப்படி விழுந்திருக்கும் என்கிறது உங்களுக்குப் புரிஞ்சு போகும்.

சிவாஜிராவ் இவ்வளவு செய்திருந்தாலும் அவன் ஒண்ணே ஒண்ணை மட்டும் செய்ததே இல்லை….!

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com