ரசிகர்கர்களிடம் சிக்கிய சிவகுமார்!

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி. சிவகுமாரின் வீடு. அவரது மகன்கள் சரவணனும், கார்த்திக்கும் சேர்ந்து வீட்டி
ரசிகர்கர்களிடம் சிக்கிய சிவகுமார்!
Updated on
2 min read

உங்க பிள்ளையை நடிகனா ஆக்குவீங்களா? நடிகர் சிவகுமாரிடம் ரசிகர்கள் கேள்வி!

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி. சிவகுமாரின் வீடு. அவரது மகன்கள் சரவணனும், கார்த்திக்கும் சேர்ந்து வீட்டில், டெலிபோனில் விளையாடிதன் விளைவாக ஒரு வீட்டில் டெலிபோன் அலறுகிறது.

ட்ரிங்…டிரிங்!

‘ஹலோ! யார் பேசறது?’

‘சிவகுமார் வீட்டிலிருந்து பேசறோம்!’

’நடிகர் சிவகுமார் வீட்டிலிருந்தா?’

‘எஸ்’

உடனே அந்த வீட்டில் ஒரே அமர்க்களம். அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் டெலிபோனருக்கே வந்து நிற்கிறார்கள். ஆர்வமாக.

மறு பக்கத்தில், ‘யாருக்கு போன் பண்றீங்க?’ என்று சிவகுமார் மகன்களைக் கேட்க, டெலிபோனை வாங்கிக் கொண்டு அவரே பேசுகிறார்.

பேசியவர்கள் சிவகுமாரை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொண்டு சிவகுமார் கோடம்பாக்கத்தை நோக்கி புறப்படுகிறார்!

கோடம்பாக்கத்தில் ‘சரி அண்ட் சேகர்’ நண்பர்கள் அவரை வரவேறிகிறார்கள். அதே சமயம் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகளை அங்கு கூடி சிவகுமாரை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

சேகர் – உங்களுக்கு ஸ்டூடியோ வட்டாரங்களில் நல்ல பெயர் இருக்கு. இதை எப்படி உங்களால் காப்பாத்திக்க முடிந்தது?

சிவ – ‘கந்தன் கருணை’ படத்திலிருந்து ஒரு வழி செஞ்சுக்கிட்டேன். ஆபிசுக்குப் போவது போல 9 மணி கால்ஹீட் என்றால் 8-40 வீட்டை விட்டுப் போய்விடுவேன். இரவு ஒன்பது மணிக்குத் தூங்கி ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை அமைச்சிக்கிட்டேன்.

மீனா சேகர் – இந்த வாழ்க்கைக்கு உங்க பெற்றோர் போதனை தான் காரணமா?

சிவ – நான் சென்னைக்கு வந்து 25 வருடம் ஆச்சு. காபி, டீ சாப்பிடுவதில்லை. நானே அமைச்சுக்கிட்ட வழி தான். இது சினிமாவுக்கான்னு இல்லை.

ராஜகோபால் – உங்க திருமண வாழ்க்கை எப்படி?

சிவ – நான் திருமணத்தையும் சினிமாவையும் தனித்தனியாக வைத்திருக்கிறேன். உடல் அழகுக்கு என்னிக்குமே நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லே. நல்ல உள்ளம் இருக்கிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்யறதுன்னு முடிவு செய்துட்டேன். இது நான் சினிமாவுக்கு வருதற்கு முன்பே செய்த முடிவு. சினிமாவுல நான் சேர்ந்த பிறகு, தினம் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுகிறேன். தினம் ஒரு முதலிரவு (சிரிப்பு) எனக்குக்கு நிரந்தரமாக உள்ள மனைவியைத்தான் ஆசைப்பட்டேன். அழகு பற்றிக் கவலைப்படவில்லை.

குமார் – ரஜினி பத்தி என்ன சொல்றீங்க?

சிவ – கதாநாயகனுக்கு இருக்கிற சில இலக்கணத் தகுதிகளை தகர்த்து எறிந்த முதல் ஆள் அவர் தான். அதுக்கு மேல கேட்காதீங்க….

ராதா – உங்க பிள்ளையை நடிகனா ஆக்குவீங்களா?

சிவ – நிச்சயமா இல்லை! இது ரொம்ப ரிஸ்கி ஃபீல்டு. முன்னே மாதிரி வாய்ப்புக்கள் இல்லை. போட்டி ஜாஸ்தி. இனி பதினைந்து வருடம் என்னைப் போல அவன் ஹீரோவாவதுக்கு ஆகும். ரொம்பக் கஷ்டம். அதை அவன் விரும்பினால் அவன் தலையெழுத்துதான். இந்த நாள் உண்மையிலேயே என்னால் மறக்க முடியாது. வெளிப்படையாக எலோரும் பேசினோம். நான் போயிட்டு வரேன்…

(சிவகுமார் புறப்படுகிறார்)

ஏற்பாடு, கட்டுரை – சிக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com