ராதிகாவைப் பற்றி சரிதா

ராதிகாவுடன் நான் தோழியானதே திடீரென்று நடந்ததுதான். யாரும் எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கவில்லை.
ராதிகாவைப் பற்றி சரிதா
Updated on
1 min read

ராதிகாவுடன் நான் தோழியானதே திடீரென்று நடந்ததுதான். யாரும் எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கவில்லை.

ஒரு நாள் ஷூட்டிங் எதுவும் இல்லாமல் வீட்டில் போரடித்து உட்கார்ந்திருந்தேன். போன் அடித்தது. எடுத்துப் பேசினவுடன், ஒருத்தி என்னைப் புகழ்ந்து தள்ளினாள். என் நடிப்பைப் பற்றியும் அதிலுள்ள நிறை குறைகள் பற்றியும் காரசாரமாக விவாதித்தாள். இறுதில் போனை வைக்கும் நேரத்தில், தன்னை ‘ராதிகா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். இவ்வளவு நேரம் நாம் பேசிக் கொண்டிருந்தது சினிமா நடிகை ராதிகாவுடன்தான் என்று அறிந்ததும் எனக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அப்போது ‘நிறம் மாறாத பூக்கள்’ ரிலீசாகி இருந்த சமயம். நான் அந்தப் படத்தை அவள் நடிப்பை எல்லாவற்றையும் புகழ்ந்து பேசினேன். ராதிகாவுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இப்படித் துவங்கிய எங்கள் நட்பு, அடுத்து ராதிகாவின் விஜயத்தால் மேலும் இறுகிற்று. அவளுடைய பிறந்த தினத்திற்கு அழைப்பதற்காக ஒரு நாள் திடீரென்று அவள், எங்கள் வீட்டுக்கு வந்தாள். அந்தச் சமயம் பார்த்துதானா நான் வெளியில் போயிருக்க வேண்டும்? அப்போது என்னால் அவளைச் சந்திக்க முடியவில்லை. அதற்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.

அதன் பிறகு அவள் வீட்டுக்கு அவள் என் வீட்டுக்கும் அடிக்கடி போய் வந்தோம். அவளுடன் பழகும் போது ஒரு ஆர்டிஸ்ட் கூட பழகற மாதிரியே இருக்காது. அந்த அளவுக்கு ஜோவியலா இருப்பா. எப்பப் பார்த்தாலும் அவளும் ஸ்ரீபிரியாவும் சேர்ந்து என்னை சீண்டிக்கிட்டே இருப்பாங்க. ராதிகா மூஞ்சைத் தூக்கி வெச்சிகிட்டு ஒரு முறை கூட நான் பார்த்ததே இல்லை.

அவளுடைய புதுப்படம் எது ரிலீசானாலும் மறக்காம என்னை இன்வைட் பண்ணுவா. ஃப்ரீயா இருந்தா, நானும் தவறாம போயி, என்னோட ட்ரூ ஓபினியனைச் சொல்லிவிட்டு வருவேன். எனக்கும் அவளுக்கும் பொதுவா ஒரு படம் கூட இதுவரைக்கும் வரவே இல்லை. ஒரு முறை ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்துக்காக என்னையும் அவளையும் ஒண்ணா பும் பண்ணாங்க. கோயம்புத்தூர்லே அவுட்டோர்னு சொன்னதும் ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. ஜாலியா கொஞ்ச நாளைக்கு என்ஜாய் பண்ணலாம்னு பிளானெல்லாம் போட்டோம். ஆனா, கால்ஷீட் பிராப்ளத்தால் நாங்க ரெண்டு பேருமே அந்தப் படம் பண்ணலே.

ராதிகாவும் ஸ்ரீபிரியாவும் என்னைச் செல்லமா ‘நாட்டுக்கட்டை’ன்னு கூப்பிடுவாங்க. நான் calmஆன, ஷை டைப்பா இருக்கறதுனால, இந்த அளவுக்கு என்கிட்டே லிபர்டி எடுத்துக்கறா ராதிகா. நானும் படம் செலக்ட் பண்றபோது நல்ல ரோல் பார்த்து செலக்ட் பண்ணு. அப்பத்தால் ஃபீல்டிலே ஸ்டெடியா நல்ல பேரோட நிலைக்க முடியும்’னெல்லாம் அட்வைஸ் பண்ணுவேன்.

மறக்க முடியாத, ஜோவியல் கேரக்டர் அவ.

கேட்டவர் : வனமானிலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com