சரிதாவைப் பற்றி ராதிகா

சரிதா அளவுக்கு பயந்த சுபாவமுள்ள பெண்ணை நான் இதுவரை சந்தித்ததே கிடையாது. தன் நிழலைக் கண்டு
சரிதாவைப் பற்றி ராதிகா
Updated on
1 min read

சரிதா அளவுக்கு பயந்த சுபாவமுள்ள பெண்ணை நான் இதுவரை சந்தித்ததே கிடையாது. தன் நிழலைக் கண்டு தானே பயப்படற ஜாதி அவ. கூட்டத்தைக் கண்டு ரொம்பப் பயப்படுவா.

ஒரு வாட்டி, நானும் ஸ்ரீபிரியாவும் சரிதாவை கூட்டிகிட்டு ‘The Champ’ படம் பார்க்க, சாந்தம் தியேட்டரிக்கு போயிருந்தோம். தியேட்டரிலே ஓரத்து சீட்டிலே சரிதா, பக்கத்திலே பிரியா, அது பக்கத்துலே நானும் உக்காந்து இருந்தோம். காலியா இருந்த என் பக்கத்து சீட்டிலே ஒரு மைனர் வந்து உட்கார்ந்தான். அதைப் பார்த்ததும் சரிதா ரொம்ப பயந்துட்டா. அவன் லேசா என்னிடம் வேலை காட்ட ஆரம்பிச்சான். பிரியா உடனே என்கிட்ட ஒரு ‘பின்’னை எடுத்துக் கொடுக்க, அதை மெதுவா அவன் கையிலே ‘சுருக்’கென்று குத்திட்டேன்.

அவன் மூஞ்சி, திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு. மெதுவா எழுந்து, வேற சீட்டுக்குப் போயிட்டான் அவன். இவ்வளவு நேரமும் மூச்சைப் பிடிச்சிக்கிட்டிருந்த சரிதா, அப்பத்தான் மூச்சையே விட்டா! இருந்து கூட அவளுக்கு பயத்துல வேர்த்துடிச்சு.

எப்ப பார்த்தாலும் புடவையே கட்டிக் கிட்டு இருக்கிறதனால, நாட்டுக்கட்டைன்னு தான் கூப்பிடுவேன் சரிதாவை. ஒரு வாட்டி மாடர்ன் டிரஸ் போட்டுக்கச் சொல்லி வற்புறுத்தினதால போட்டுக்கிட்டா. ஆனால் கார்கிட்டே வந்து, கதவைத் திறக்கற சமயம் வெட்கப்பட்டுக்கிட்டு மறுபடியும் உள்ளே ஓடிப் போய், சாரி கட்டிகிட்டு வந்து, ‘சாரி’ன்னு சொன்னா.

அவகிட்ட இன்னொரு ஹாபிட் எதைச் சொன்னாலும் அதெல்லாம் நிஜம்தானான்னு துளிக்கூட நினைச்சே பார்க்காம சொன்னதை சொன்னபடியே நம்பிடுவா. ஒரு வாட்டி நானும் ஸ்ரீபிரியாவும் ‘இனிமே தமிழ்ச் சினிமாவிலே கிஸ்ஸிங் ஸீன் கண்டிப்பா வரும். அதுக்கு சென்ஸார் ஒத்துக்கிட்டாங்க’ன்னு சொன்னதும் அதை அப்படியே நம்பிட்டா. அன்னிக்கு முழுவதும் சரியாச் சாப்பாடு கூட இல்லாம ரொம்ப வருத்தப்பட்டா, கடைசிலேதான் நாங்க பொய் சொல்றோம்ங்கற உண்மையச் சொன்னோம். அதுக்கப்புறம் தான் அவளுக்கு உயிரே வந்தது. பாவம்!

எது, எப்படித்தான் இருந்தாலும், ‘ஆக்டிங்’ திறமையைப் பொறுத்தவரைக்கும் அவளை மிஞ்ச யாராலேயும் முடியாது. தமிழ் நடிகைகளிலே ‘ஊர்வசி’ விருது வாங்கறதுக்குத் தகுதியான நடிகை யாருன்னா, அது நிச்சயம் சரிதா தான். இதில் சந்தேகமில்லை.

கேட்டவர் : வனமானிலி

படம் - சுபா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com