சிவாஜி கொடுத்த நண்டு மசாலா - நடிகை மாதவி

ஐந்து மொழி நாயகி
சிவாஜி கொடுத்த நண்டு மசாலா - நடிகை மாதவி
Published on
Updated on
1 min read

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. நட்சத்திரங்கள் சற்று நிம்மதியாக ஓய்வெடுக்கும் நாள் . மாதவியை சந்திக்கலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றேன் .

முதல் கேள்வி: ஐந்து மொழி நாயகியான நீங்கள் எப்படி தொடர்ந்து இத்தனை மொழிகளில் வலம் வருகிறீர்கள்?

அதற்கு நான் காரணமல்ல. கால்ஷீட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் என் தகப்பனார் கவனித்து வருகிறார். நடிப்பது மட்டுமே    என் வேலை. ஹிந்தியில் வலம் வருவதற்கு எனக்கு அமைந்த நல்ல படங்கள், நிறுவனங்கள் காரணம். ஒரு படத்தில் அமிதாப்புடன் நடிக்கிறேன்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தமிழில் பேச ஆசைப்படுவார் அவர். ' வணக்கம், நல்லாயிருக்கிங்களா? சாப்பிட்டீங்களா? சின்னப் பாப்பா, வாயில விரலை வச்சா கடிக்கத் தெரியாது' இதுதான் அவருக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள். என்னிடம் தமிழ் கற்றுக் கொள்ள அவர் ஆசைப்படுவார். அவரிடம் நான் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்றேன்.  

அந்த வாரம் வந்திருந்த 'ஸ்க்ரீன்' பத்திரிக்கையில் என்னுடைய படம் வண்ணத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. செட்டில் 'மாதவிஜி' என்று அவர் உரக்க கூப்பிட்டவுடன் திரும்பி பார்த்தேன்.  'ஸ்க்ரீன்' பத்திரிக்கையில் வண்ணப்படம் வந்தவுடன் 'கற்பனையில் மிதக்கத் தொடங்கி விட்டீர்களா? இனி நாங்கள் எல்லாம் எப்படி கண்ணில் படுவோம்? என்றுஅன்று முழுவதும் என்னைக் கேலி செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் திடீரென்று பேச்சின் நடுவே என் பிறந்த நாளை சொன்னேன். ஞாபகமாக அந்த நாளுக்கு முன்னதாகவே எனக்கு வாழ்த்தை தெரிவித்தார்.

தமிழ்ப்படங்களில் எல்லா கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது.ஒரு நாள் பேச்சு வாக்கில்  , "நான் அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவேன். குறிப்பாக நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு" என்றேன். அடுத்த நாள் படப்பிடிப்பின் போது, உணவு இடைவேளையில் என்னை சாபபாட்டிற்கு அழைத்தார் சிவாஜி அவர்கள். சென்று பார்த்த பொழுது எனக்காக பிரத்தேயகமாக நண்டு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.யார் கொண்டு வந்தது என்று கேட்பதற்கு முன்பாகவே "நான் தான் உனக்கு பிடிக்குமே என்று வீட்டில் செய்யச் சொன்னேன். என் மனைவி செய்து அனுப்பியிருக்கிறாள்' என்றார் சிவாஜி அவர்கள்.என்னால் சில நிமிடம் பேசவே முடியவில்லை.

தன் சக கலைஞர்கள் மீது அவருக்குதான் எத்தனை பற்றும் பாசமும்? நடிப்பை பொறுத்தவரை நான்  அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

பேட்டி: சலன்   

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.10.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com