முற்பிறவியில் என் பெற்றோர்கள் யார்? - ராஜேஷ்

ராஜேஷும் நாடி ஜோசியமும்
முற்பிறவியில் என் பெற்றோர்கள் யார்? - ராஜேஷ்
Published on
Updated on
1 min read

புதுமையான எண்ணம் படைத்தவர்; இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்றெல்லாம் ராஜேஷை பற்றிச் சொல்லப்படுவதுண்டு. அப்படிப்பட்டவரை பற்றி ஒரு நியூஸ். 'நாடி ஜோசியம்' என்று யாரவது சொன்னால் போதும்; எங்கே,எப்படி? சரியா சொல்றாங்களா? என்று ராஜேஷ் ஆவலோடு விசாரிப்பதும், அது சம்பந்தமான குறிப்புகளை கேட்டறிவதிலும் வேகமாக இருக்கிறார்.

உங்களுக்குத் தெரிஞ்ச நாடி ஜோசியர் யாராச்சும் இருந்தாச் சொல்லுங்க..முற்பிறவில எப்டிங்கறத பத்தி தெரிஞ்சுக்கலாம் என்று ராஜேஷ் என்னிடமே கேட்டார்.

இதிலே எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? என்று கேட்டால் 'நிச்சயமா நம்பிக்கை இருக்கு.அது ஒரு சயின்ஸ்.சித்தர்களாச் சேர்ந்து நம்ம வாழ்க்கையை பத்தி எழுதி வச்சிருக்காங்க. அந்த ஓலைச் சுவடிகளை வச்சுத்தான் இவங்க நமக்கு வாசிச்சுக் காட்டுறாங்க. நாடி ஜோசியத்தை ஏன் நான் பாக்குறதுக்கு ஆசைப்படறேன் தெரியுமா? முற்பிறவியில் என் பெற்றோர்கள் யார்? அவங்க இப்போ எங்க இருக்காங்க?இப்படி சில விஷயங்களை தெரிஞ்சுக்குறத்துக்குத்தான் நான் விரும்பறேன்' என்றார் ராஜேஷ். 

முற்பிறவியில உங்க பெற்றோர்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டு பார்க்கப் போகும் போது, ஒரு வேளை அவங்க ஏழையா இருந்தா என்ன செய்வீங்க? பணக்காரங்களா இருந்தா என்ன செய்வீங்க? என்று கேட்டேன்.

ஏழையா இருந்தா அவங்களுக்கு என்னாலான உதவிகளை செய்வேன். பணக்காரங்களா இருந்தா அவங்க உள்ளம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு பழகுவேன் என்றார் ராஜேஷ்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகி திரு.கரிகாலன், 'வைத்தீஸ்வரன் கோயிலில் ஒருத்தர்கிட்ட நாடி ஜோசியம் பாத்தேன், அசந்து போயிட்டேன்' என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் ராஜேஷ், 'கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, அதையும்தான் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்' என்று கூறியபடி அவரிடம் வைத்தீஸ்வரன் நாடி ஜோசியம் பற்றி விசாரிக்க சென்று விட்டார்.

சுடர்வண்ணன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com